உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில், நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, தகவல் கிடைத்தது. அப்பகுதியில் 4 மாவட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uegr9wdu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு பாதுகாப்பு படை வீரருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல், நாராயண்பூர் மாவட்டத்திலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. சுக்மா, தந்தேவாடா, நாராயண்பூர் கான்கேர் ஆகிய 4 மாவட்டங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shyamnats
ஜூன் 15, 2024 19:22

ரியல் ஹீரோக்கள் இவர்கள், இவர்களுக்கு ஒரு சல்யூட் . அரசியல் வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக அக்னி வீர் திட்டங்களை எதிர்ப்பதும், ரீல் ஹீரோக்கள் பின் இளைய சமுதாயம் வெறி கொண்டு திரிவதும் ஏற்புடையதல்ல. நாட்டு நலனே முக்கியம்.


P. VENKATESH RAJA
ஜூன் 15, 2024 18:43

நக்சலைட்டுகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை