உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்: அமித்ஷா

நக்சல்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்: அமித்ஷா

தாண்டேவாடா: '' நக்சலைட்கள் ஆயுதங்களை கைவிட்டால், மத்திய, மாநில அரசு பாதுகாக்கும். தவறினால், அவர்களை பாதுகாப்பு படையினர் கையாள்வார்கள்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: துப்பாக்கிச்சூட்டிற்கும், வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான நேரம் முடிவடைந்துவிட்டது. நக்சலைட்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நக்சலைட் கொல்லப்படும் போது, இந்த பகுதியில் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த பகுதிக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. நக்சலைட்களை சரணடையச் செய்தால், அந்த கிராமங்கள் நக்சலைட் இல்லா கிராமம் என அறிவிக்கப்படுவதுடன், அக்கிராமம் வளர்ச்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்து உள்ளார். அனைவரும் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். உங்களை இந்திய அரசும், சத்தீஸ்கர் அரசும் பாதுகாக்கும்.கடந்த மூன்று மாதங்களில் 521 நக்சல்கள் சரணடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 881 நக்சல்கள் சரணடைந்தனர். சரணடைபவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுவார்கள். ஆயுதங்களை தூக்குபவர்கள் ஆயுதப்படையினரால் கையாளப்படுவார்கள். பஸ்டர் பகுதியானது, பயத்திற்கானது என்ற நிலை மாறி, எதிர்காலத்திற்கானது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல் பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்படும்.முன்பு இந்த பகுதியில் இருந்து யாரும் பேச மாட்டார்கள். இங்கு யாரும் செல்ல வேண்டாம் என்றே கூறுவார்கள். ஆனால், தற்போது 50 ஆயிரம் ஆதிவாசி சகோதர, சகோதரிகளுடன் ராமநவமி மற்றும் அஷ்டமியை இந்த பகுதியில் கொண்டாடுகிறோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

அமித் ஷா பகிர்ந்த படம்!

சோலார் மேற்கூரையில் படுத்திருக்கும் சிறுவர்கள் மொபைல் போனில் விளையாடும் படத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ளார். 'சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் - சுக்மா பிராந்தியம், ஒரு காலத்தில் நக்சல்களின் கோட்டையாக இருந்தது. அச்சம் காரணமாக மக்கள் வெளியே வரவே அஞ்சிய காலம் இது. இப்போது, அங்குள்ள தோண்ட்ரா பஞ்சாயத்தில் சிறுவர்கள் மொபைல் போனில் அச்சமின்றி விளையாடுவதை காணும்போதும், இதயம் மகிழ்ச்சி கொள்கிறது. நம்பிக்கை, வளர்ச்சியை வெளிப்படுத்தும் இந்த படத்தை பகிர்வதில் மகிழ்ச்சி' என்று அவர் பதிவிட்டுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மீனவ நண்பன்
ஏப் 05, 2025 21:31

நக்சல் பகுதிகளில் ராமகிருஷ்ணா ஆசிரம அமைப்புகள் கல்வி சுகாதாரம் கிராம மக்களின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க மார்க்கெட் அமைத்து தன்னலமில்லா சேவை செய்கிறார்கள்


Kulandai kannan
ஏப் 05, 2025 20:48

பாஜக அரசின் சாதனைகளில் பிரதானமானது நக்சல் ஒழிப்புதான்


மீனவ நண்பன்
ஏப் 05, 2025 20:12

பனிஷ்மென்ட் போஸ்டிங் என்று இந்த பகுதிகளில் போலீஸ் மற்றும் அரசாங்க ஊழியர்களை அனுப்பி அவர்களது மனோ தைரியத்தை சுக்கு நூறாக்கி காங்கிரஸ் வைத்திருந்தது அந்த பகுதிகளில் இருக்கும் மத்திய பாதுகாப்பு படையினர் ஒரு அவசரத்துக்கு கூட உடனே வெளியே வர பயப்படுவார்கள் 1971 வங்க தேச போரில் அகதிகளாக வந்தவர்களை இந்த பகுதியில் பகாஞ்சொர் என்ற இடத்தில செட்டில் பண்ணினார்கள் நக்ஸல்களாக இருந்த ரெட்டிகள் நாளடைவில் இந்த பங்களாதேஷ் அகதிகளை பிராக்சி நக்ஸலைட்டுகளாக நியமித்து நகரங்களுக்கு சென்று விட்டார்கள் இந்த நக்சல் பகுதிகளில் அதிக கனிம வளங்களும் தேக்கு மரங்களும் அதிகம்


அப்பாவி
ஏப் 05, 2025 20:06

நோய் நாடி நோய்முதல் நாடி... முதலில் அவிங்களோட பிரச்சனையே அவிங்களோட வளங்கள் மத்த மாநில பணமுதலைகளால் சுரண்டப்பட்டு , அவர்களது பண்பாடும் சீர் குலைக்கப்படுகிறது. முன்னேத்தறோம்னு சொல்லி அவிங்களை அழிக்கிறீங்க. இதை நிறுத்தினால் ஆயுதங்களை கீழே போடுவாங்க.


vivek
ஏப் 06, 2025 05:25

தலை சிறந்த அறிவாளி சொம்பு நம்ம கோவாலா மட்டுமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை