உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி ! உ.பி., மேற்குவங்கம் பா.ஜ., காலை வாரியது

மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி ! உ.பி., மேற்குவங்கம் பா.ஜ., காலை வாரியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 18 வது லோக்சபா தேர்தலில் இன்று காலை முதல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காலையில் துவக்கத்தில் பா.ஜ., 300ம் தாண்டி முன்னிலை சென்று கொண்டிருந்தது. ஆனால் 10 மணிக்கு மேல் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இருப்பினும் பா.ஜ., தலைமையிலான கூட்டணியே (தற்போது 295) மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. பா.ஜ., கட்சி அதிகம் எதிர்பார்த்த உ.பி., மேற்குவங்கம் பா.ஜ., வின் காலை வாரியது. மஹாராஷ்ட்டிரா , ராஜஸ்தான் மக்களும் தீர்ப்பை மாற்றி அளித்தனர்.கடந்த இரண்டரை மாதங்களாக நடந்து முடிந்த 18 வது லோக்சபா ஏழு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை முதல் பா.ஜ., தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியே அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. 3வது முறை ( ஹாட்ரிக் ) பிரதமர் ஆகும் வாய்ப்பை நரேந்திரமோடி பெற்றுள்ளார். இந்தியாவில் ஜவஹர்லால் நேரு காலத்திற்கு பின்னர் தொடர்ந்து 3 வது முறை வெற்றி பெற்ற பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். கடந்த 77 ஆண்டுகால வரலாற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டும் வாழ்த்தும் குவிந்து வருகின்றன.

10 ஆண்டில் பல திட்டங்கள்

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை, அனைவருக்கும் வங்கிகணக்கு, ஆதார் நடைமுறை வெற்றி, அயோத்தியில் ராமர் கோயில், கறுப்புப்பணம் ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், பழைய சட்டங்களை ஒழித்தல், காஷ்மீரில் மோடி எடுத்த சில முக்கிய முடிவுகள், ஏழை, விவசாயிகளின் முன்னேற்றம், விவசாயிகளுக்கு உதவிதொகை, இலவச காஸ், பிரதான்மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, மருத்துவகாப்பீடு, பெண்களுக்கு அதிகாரம், ஏழைகளுக்கு பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம், கோவிட் காலத்தில் தடுப்பு முறைகள் சிறப்பான கையாள்தல், இந்நேரத்தில் மக்கள் தேவைகளுக்கேற்ப உதவியது, பிரதமர் மோடியின் சிறப்பான திட்டமிட்ட பிரசாரம், இப்படி பல்வேறு விஷயங்கள் பா.ஜ., கூட்டணி வெற்றிக்கு கைகொடுத்துள்ளது.

எதிர்கட்சிகள் பிரசாரம் !

காங்., தலைமையிலான இண்டியா கூட்டணியில் 28 கட்சிகள் இடம்பெற்றன. பல தலைவர்கள் ஒன்று கூடி பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள், கடும் விமர்சனம் வைத்தனர். இதனால் பா.ஜ., ஓட்டுக்கள் சற்று சரிந்துள்ளது. கடந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய காங் கூட்டணி தற்போது 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ALDRIN BLACIUS
ஜூன் 05, 2024 17:42

பாஜகவின் அடிவருடி


Ramaswamy Jayaraman
ஜூன் 05, 2024 13:01

அதிமுக வும் பிஜேபி யும் இனைந்து போட்டி இட்டுருந்தால் தமிழக முடிவுகள் மாறியிருக்கும். தோல்வியிட்ட பல இடங்களில் இவர்களின் ஓட்டுக்களை கூட்டினால் திமுக வோட்டை விட அதிகம். இந்த தேர்தல் இருகட்சிகளுக்கும் புதிய பாடம் . அதிமுக ஒருங்கிணைய வேண்டும். அதுதான் பலம்.


PRASHANTH PRESANNA
ஜூன் 06, 2024 15:52

ஆமாம், திமுகவிற்கு இன்னும் அதிக வாக்குகள் கிடைத்திருக்கும்


Sasi Kumar
ஜூன் 05, 2024 07:33

பணத்திற்க்கும் இலவசத்திற்க்கும் அடிமையான தமிழக மக்கள் இருக்கும் வரை இந்த திருட்டு விடியல் திராவிட கட்சிகளை ஒழிக்க முடியாது, தேர்தலில் அள்ளி வீசும் இலவசங்களுக்கு நாம் வரிகட்டுவதை எதிர்க்க வேண்டும் அவனது அப்பன் வீட்டு காசை எடுத்து தர வைத்தால் இலவச அறிவிப்பு தடுக்கப்படலாம்


PRASHANTH PRESANNA
ஜூன் 06, 2024 15:59

என்னமோ பிஜேபி பணமும் இலவசங்களும் குடிக்காத மாதிரி பேசக்கூடாது. பணம் குடித்து வாங்கினது தான்னு ஹிண்டன்பெர்க் ரிப்போர்ட் மறந்ததா ???


Njarokiyasamy N
ஜூன் 05, 2024 01:45

நீங்கள் உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் திரு.மோடி அவர்களின் ஆட்சி மக்களுக்கு பயன் கிடைத்ததா எந்த மக்களுக்கு என்ன கிடைத்தது


Thirumalaimuthu L
ஜூன் 05, 2024 07:34

குறிப்பிட பட்டுள்ள திட்டங்கள், ரேஷன் 5 கிலோ அரிசி, நாட்டில் சாலைகள் உலக தரதிற்கு உயர்வு, டிஜிட்டல் மயம் அனைவருக்கும் வங்கியில் கணக்கு, உங்கள் வீட்டில் அனைவர்க்கும் இலவச கோரோனோ தடுப்பூசி மறந்து போய் விடீர்கள் போல் வேற என்ன செய்யணும்... 3 வது முறை வருவது சாதாரண விஷயம் இல்லை.?


Sankar M
ஜூன் 04, 2024 23:23

பிஜேபி வெற்றி மற்றும் ஆட்சி என்பது இனிப்பான செய்தி... ஆனால் முன்னேறும் வேகத்தில் இந்தியாவில் அதிகம் தடைகள் வரும்..அது தான் வருத்தம் தருகிறது


muralee
ஜூன் 04, 2024 23:06

உத்திர பிரதேஷ், மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்காளம் .. இவைதான் பிஜேபியை காலைவாரிய மாநிலங்கள் ... ராமர் கோயிலை கட்டியிருந்தாலும், கட்சித்தலைமை உத்திரப்பிரதேஷின் நிஜ அரசியல் சூழலை உணராதவறிவிட்டது. மஹாராஷ்டிராவில் ஷிண்டேயுடன் சேர்ந்தது சரி ... ஆனால், பவருடன் சேர்ந்தது, ராஜ் தாக்கரேயுடன் சேர்ந்தது .... மக்களை சலிப்பும், வெறுப்பும் அடைய வைத்திருக்கும் .... மேற்கு வங்காளத்தில் பிஜேபியின் பின்னடைவு புரியாத புதிர்.... சந்தேஷ் காலி பாலியல் வன்முறைக்கு பிறகும் ... அது சரி, மழை வெள்ளத்தில் சென்னையை கண்டு கொள்ளாதவர்களுக்கு இன்று மக்கள் வெற்றியை தேடி தரவில்லையா என்ன .... மோடி அவர்கள் கூட நான் மனித பிறவியில்ல.... சினிமா எடுத்தபின்னர் தான் காந்தியை மக்களுக்கு தெரிந்தது என்பது போன்ற பேச்சுக்களை தவிர்த்திருக்கலாம்.... அண்ணாமலை அபிமன்யுவை போல நேர்மையும், துணிசாலும் கலந்து செயல் பட்ட போதும், அர்ஜுனனின் ராஜதந்திரமில்லையால் அந்தோ வெற்றி வாய்ப்பை இழந்தார் .. 2026 தேர்தலை மனதில்கொண்டு, அவர், அதிமுகவுடன் அனுசரித்த்து கூட்டணி வைத்து செயல் பட்டிருக்க வேண்டும். 2026-ல் அதிமுக மற்றும் பிஜேபி காட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி இடுவது காலத்தின் கட்டாயம்


JEEVAKUMAR RADHAKRISHNAN
ஜூன் 04, 2024 20:29

என்ன சொன்னாலும் எதிர் கட்சி நரி தந்திரங்களை எதிர்த்து மீண்டும் மோடிஜி மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் மிகவும் சந்தோஷம் அதைவிட மகிழ்ச்சி எதிர் கட்சிகள் அவதியை அடுத்த ஐந்து வருடம் பார்ப்பது தான்


PRASHANTH PRESANNA
ஜூன் 06, 2024 16:26

இந்த 5 வருடத்திற்குள் இன்னும் எதையெல்லாம் இந்தியா பொது சொத்துகளை விக்கபோராங்களோ ?? நாட்டு மக்களுக்கு யாரென்றே தெரியாத அதானியை உலக பணக்கார அந்தஸ்த்தை குடுத்தாச்சு, அதானிக்கே பல துறைமுகங்களும் பல விமான நிலையங்களையும் குடுததாச்சு? ? யாராருக்கு அவுங்க வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் வந்தியிருக்குன்னு சொல்லுங்க ?? இன்னும் எத்தனையோ இருக்கு......


Manikandan Mayavan
ஜூன் 04, 2024 20:17

கடைசி நேரத்தில் லோன் தள்ளுபடி.. இலவசங்கள் போன்ற அறிப்புகளில் மக்கள் மயங்கி விட்டனர். வேறொன்றுமில்லை. இங்கு, உண்மையை திரித்து கூறவே, குழு அமைத்து வேலை பார்க்கும் கூட்டம்.


ALDRIN BLACIUS
ஜூன் 04, 2024 19:50

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சொற்ப பணம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது பெரும் பங்கு நிதியை மாநில அரசு தான் வழங்குகிறது. நீட் தேர்வு ஏழை மக்களின் குழந்தைகளின் மருத்துவர் ஆகும் கனவு தவிடு பொடியகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிகமாக உள்ளது. ஜவுளி துறை, பின்னல் ஆடை தொழில் அழிந்து விட்டது. GST வரியல் நாட்டின் வளர்ச்சி குளையந்து விட்டது. ஒரு நடுத்தர மக்கள் 100 ரூபாயில் GST வரிக்கு மட்டுமே செல்கிறது


Dorairaj
ஜூன் 04, 2024 17:38

எதிர்பாராமல் ஒடிசா கை கொடுத்தது, ஆனால் தமிழர்கள்மீது வீண் பழி மனதை வருடுகிறது. தமிழ்நாடு கை விட்டாலும் தமிழர்கள் பழி கை கொடுத்தது.


ஆரூர் ரங்
ஜூன் 04, 2024 19:13

பிஜெபி யுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நவீன் பட்நாயக்கை தவறாக வழிநடத்தி, பிரித்து BJD யை அழித்த பாண்டியன் இனி அங்கு குப்பை கொட்ட முடியாது.( நாளையே இங்கு இருநூறு உ.பி வேலைக்கு சேர்ப்பார்கள் ) .


தமிழ்
ஜூன் 04, 2024 22:12

ஆனாலும் அது வீண் பழிதானே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை