உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரோஜினி நகர் உட்பட 3 மார்க்கெட்டை நவீனப்படுத்த என்.டி.எம்.சி., திட்டம்

சரோஜினி நகர் உட்பட 3 மார்க்கெட்டை நவீனப்படுத்த என்.டி.எம்.சி., திட்டம்

புதுடில்லி:தலைநகர் டில்லியின் முக்கிய அடையாளங்களாக திகழும் சரோஜினி நகர் மார்க்கெட், மல்சா மார்க்கெட் மற்றும் அலிகஞ்ச் மார்க்கெட் ஆகியவற்றை சீரமைக்க, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் துணைத் தலைவர் குல்ஜித் சிங் சாஹல் கூறியதாவது:புகழ்பெற்ற சரோஜினி நகர் மார்க்கெட், மல்சா மார்க்கெட் மற்றும் அலிகஞ்ச் மார்க்கெட் ஆகிய மூன்றையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.டில்லி மாஸ்டர் பிளான் திட்டத்தில், இந்த மூன்று மார்க்கெட்டுகளும் சீரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும். சரோஜினி மார்க்கெட்டில் கீழ் தளம், முதல் தளம், இரண்டாவது தளம் மற்றும் மூன்றாவது தளம் கட்டப்படு, இதில், மூன்றாவது தளத்தின் ஒரு பகுதி சில்லறை வியாபாரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மறுசீரமைப்பு கலாசார அழகை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு செய்யப்படும்.அதேபோல, அலிகஞ்ச் மார்க்கெட் மற்றும் மல்சா மார்க் மார்க்கெட் ஆகியவையும் நவீனமயமாக்கப்படும். இந்த மூன்று மார்க்கெட்டுகளிலும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்.ஏற்கனவே கன்னா மார்க்கெட் மிகச்சிறப்பாக சீரமைக்கப்பட்டுள்ளது. அது, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடன் நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த மூன்று மார்க்கெட்டையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை