உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்க 400 சீட்களை வெல்ல வேண்டும்: அசாம் முதல்வர்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்க 400 சீட்களை வெல்ல வேண்டும்: அசாம் முதல்வர்

புதுடில்லி: ''லோக்சபா தேர்தலில் பா.ஜ., 400 இடங்களில் வெற்றிப்பெற்றால், மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோயில் கட்டப்படும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு, பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்'' என அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: பா.ஜ., 300 இடங்களில் வெற்றிப் பெற்றபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. இம்முறை 400 இடங்களை கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோயில் கட்டப்படும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு, பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும். காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பார்லிமென்டில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கோதுமை மாவு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து, அப்பகுதி மக்கள் கடந்த 10ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர், இந்தப் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக் கூறி சிலர் போஸ்டர்களை ஒட்டியதாகக் கூறப்படுகிறது. 6வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

jayvee
மே 15, 2024 18:05

கச்சத்தீவை மீட்போம், PoK வை மீட்போம் என்றெல்லாம் பிதற்றுவது பிஜேபி க்கும் நல்லதில்லை இந்தியாவிற்கும் நல்லதில்லை இவை இரண்டும் நடக்கவும் நடக்காது


முருகன்
மே 15, 2024 12:17

அப்படியே சீனா ஆக்கிரமிப்புக்கு எதிராக பேச தைரியம் இருக்க உங்களுக்கு அதனை முதலில் இனைக்க முடியுமா?


sethu
மே 15, 2024 18:05

அன்னன் இதை சீனாவில் இருந்து சொன்னால் நாங்கள் ஒத்துக்கொள்ள தயார்


Rajinikanth
மே 15, 2024 11:45

இதயெல்லாம் தைரியமா பிஜேபி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுங்கள் அப்பொழுது தான் மக்கள் கேள்வி கேட்க முடியும் செய்யவில்லை என்றால் அதை விடுத்தது மேடையில் கண்டபடி கூவக்கூடாது


ஆரூர் ரங்
மே 15, 2024 11:16

இன்றும் காஷ்மீர் சட்டசபையில் பாக் ஆக்கிரமிப்பு பகுதி காஷ்மீரி தொகுதிகளுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. காஷ்மீர் முஸ்லிம்களை அவர்களது கடவுள் தேசமான பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டு ஆக்கிரமிப்பு பகுதியை பாரதத்தின் பகுதியாக ஆக்குவது தவறல்ல.. ஒரே பிரச்சினை அதில் சீனா பெரிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அதனை சீனாவின் பகுதியாகவே கருதுகின்றது.


தமிழ்வேள்
மே 15, 2024 11:01

பி ஓ கே நிலம் மட்டும் நமக்கு போதுமானது ஹிந்து சீக்கிய பவுத்தர்கள் இந்திய குடிமக்களாகலாம் இஸ்லாமியர்கள் தேவையில்லை அவர்கள் ஹிந்து தர்மத்துக்கு மாறினால் வரவேற்கலாம்


Sampath Kumar
மே 15, 2024 10:50

வாய்ப்பு இல்லை கண்ணா காஸ்மீர் என்றும் தீர தலை வலி தான் இங்க பண்டிட் கும்பல் தான் இதுக்கு முக்கிய காரணம் வரலாற்றாது பார்த்து முடிவு செயுங்க


ஆரூர் ரங்
மே 15, 2024 11:11

ஜவஹர்லால் நேரு ஒரு காஷ்மீரி பண்டிட் தானே? (அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட் என்றுதான் அழைக்கப்பட்டார்). ஆக அந்த பண்டிட் தான் பிரச்சனைக்கு காரணம் என்கிறீர்களா?


Syed ghouse basha
மே 15, 2024 10:30

பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது நீங்க தானே? அப்போ அதை செய்திருக்கலாமே? சீனா விடம் நீங்க இழந்த இந்திய பகுதியை மீட்டிருக்கலாமே? என்ன செய்தீர்கள்? சீனாவின் பெயரைகூட உச்சரிக்க பயப்படுகிறீர்கள்


ஆரூர் ரங்
மே 15, 2024 11:18

பொருளாதார வீழ்ச்சி அடைந்து வருவதால் தானாகவே சப்பை மூக்கன் வெளியேறுவார்கள்.


hari
மே 15, 2024 12:44

அப்போ யாரு குடுத்தது னு சொல்லேன்


Syed ghouse basha
மே 15, 2024 10:26

குறைந்த சீட் வைத்திருந்த இந்திராகாந்தி பாகிஸ்தானை பலமுறை பந்தாடியிருக்கிறார் நீங்க ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிடிக்க சீட் கொடுத்து அதை கைப்பற்ற வேண்டியதில்லை காங்கிரஸ் எளிதாக அதை கைப்பறும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 15, 2024 13:54

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியா பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் அங்கிருந்து வெளியேறாமல் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள இடம் காங்கிரஸ் அரசு பாகிஸ்தானை போர் முடிவடைந்த பின்னர் வெளியேற்றமால் தவறி விட்ட இடம் போரில் வெற்றி பெற்றும் தோல்வி அடைந்த


Ramanujadasan
மே 15, 2024 10:13

கேட்டது கிடைக்கும், நினைப்பது நடக்கும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி