உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛நீட் முறைகேடு வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது என்.டி.ஏ.

‛நீட் முறைகேடு வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது என்.டி.ஏ.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛நீட்' தேர்வு முறைகேடு வழக்கில் இன்று தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qhl80k35&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை துவங்கியுள்ளது. பீஹாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த விசாரணையில், என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.அதில் 2024 ‛நீட்' தேர்வில் 63 முறைகேடு புகார்கள் பதிவாகியுள்ளன. விசாரணையில் 33 மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுளளது. 22 மாணவர்கள் மூன்றாண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 பேரின் முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு வினாத்தாளை ‛நீட்‛ அலுவலகத்தில் தான் நிபுணர்கள் தயார் செய்வர். இந்த வினாத்தாளில் கேள்வி எது என்பது நிபுணர்களுக்கே தெரியாது. தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். இவ்வாறு என்.டி.ஏ, பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kosalaraman advocate
ஜூலை 11, 2024 20:10

நீட் தேர்வு எழுதுவதற்கு அதிக விதிமுறைகள் உள்ளன வினாத்தாளில் அதிக விதிமுறைகள் உள்ளன தேர்வு எழுத வருவதற்கு அதிக விதிமுறைகள் உள்ளன ஆனால் அந்தத் தேர்வு வாரியத்தை கட்டுப்படுத்த மற்றும் தேர்வு வாரியங்களின் சரியான கண்காணிப்பு மற்றும் பொது நபராக ஒவ்வொரு வாரியத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தி அதில் பெண் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ஒரு சமூக ஆர்வலர் இவர்களை கொண்டு இதனை பராமரிக்க வேண்டும் ஒரு நாட்டில் தேர்தல் எதனை போன்றதோ அதனை விட மருத்துவ தேர்வும் முக்கியமானது தேர்தல் சரியாக நடைபெறுகிறது என்றால் மக்களின் வாழ்வாதாரமாக மாறும் ஒரு நல்ல மருத்துவர் உருவாகவில்லை என்றால் மக்களின் வாழ்க்கை முடிவுக்கு வரும்


வாசகர்
ஜூலை 10, 2024 22:43

ஒட்டுமொத்த தேர்வு ரத்து கூடாது. நேர்மையாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், ஒரு சில திருட்டு கும்பல் செய்த மொள்ளமாரி தனத்துக்கு பலியாகக்கூடாது. நமது சட்ட அமைப்பே 100 குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்றுதான் உருவாக்கப்பட்டுள்ளது, அதிக சதவீதம் கொன்ட நேர்மையாக நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது. தவறு நடந்த பகுதிகளில் மட்டுமே மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்.


Easwar Kamal
ஜூலை 10, 2024 21:13

தெரிஞ்சு நடந்தது இவளவு. மக்களுக்கு தெரியாமல் நடந்தது எவ்வளவோ? முன்னால் இந்த மருத்துவ முறை கேடு மாநிலம் அளவில் இருந்தது அது சிறு புள்ளியாக இருந்தது எப்போது இந்தியா அள்வுக்கு சென்றதோ இப்போது பெரிய வட்டமகிவிட்டது. இந்த நீட் பெரிய பிசினஸ் ஆக உருவெடுத்து உள்ளது. முளையிலே கிள்ளி எறிய வேண்டும். இது மக்களை காக்கும் பனி சும்மா பத்தோடு பதினொன்றாக இந்த துறை கிடையாது .


ஆரூர் ரங்
ஜூலை 10, 2024 21:45

IITJEE நாடு முழுவதும் நடக்கிறது எதிர்ப்பில்லை. UPSC, TNPSC க்கும் எதிர்ப்பில்லை. கல்வித் தந்தை அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை என்பதால் நீட்டு க்கு எதிர்ப்பு.


GMM
ஜூலை 10, 2024 20:25

தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது போல் புகார் தாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் ஒப்பிட முடியும். வினா தயாரிப்பு நிர்வாக ரகசியம். முன்பு கலெக்டர் அலுவலகத்தில் ரகசியம் காக்க என்று எழுதி இருக்கும். Ex. பாலச்சந்தர் காவிய தலைவி படம். முகமை முன் கணித்து அநீதி பற்றி தெரிவிப்பது தவறு. நீதிமன்றம், எதிர்க்கட்சி தலைவர் பார்வை ஒன்று போல் உள்ளது?.


தாமரை மலர்கிறது
ஜூலை 10, 2024 20:18

முறைகேடு உள்ளது என்பதற்காக நீட் தேர்வை நிறுத்தமுடியாது. முறைகேட்டை எப்படி தடுக்கலாம் என்று முயற்சிக்க வேண்டும். அதை செய்தாலே போதும். நீட் தேர்வு சூப்பராக செயல்படுகிறது.


Sivaprakasam Chinnayan
ஜூலை 10, 2024 21:31

ஐயா அடுத்த தேர்வில் கவனமாக செயல்படுங்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி