உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் வினாத்தாள் கசிவு: இரண்டு பேரை கைது செய்தது சி.பி.ஐ.,

நீட் வினாத்தாள் கசிவு: இரண்டு பேரை கைது செய்தது சி.பி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பாட்னாவில் இரண்டு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.மே 5 ல் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பீஹாரில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. முறைகேடு தொடர்பான இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ஏற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீஹார் தலைநகர் பாட்னாவில் இரண்டு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகியோரை கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை துவக்கிய பிறகு முதலில் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் இவர்கள் முதல்முறையாக சிக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஜூன் 27, 2024 16:30

நீட் மட்டும் இல்லை, jee தேர்விலும் ராஜஸ்தான் kota மாணவர்கள் முன்னிலையில் வருகின்றனர் ஆறாம் வகுப்பிலிருந்தே coaching , மற்றும் ஹாஸ்டலில் தங்கி தயாரித்தல், என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்


Bala Paddy
ஜூன் 27, 2024 15:45

இதில் நிச்சயம் காங்கிரஸின் பங்கு இருக்கும்.


Tamil Inban
ஜூன் 27, 2024 15:36

ராஜஸ்தான் மற்றும் பீஹாரிலிருந்து எப்படி அதிகமான IAS மற்றும் IPS அதிகாரிகள் வருகிறார்கள் அதற்கும் ஒரு விசாரணை தேவை உள்ளது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ