உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்

பாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் உள்ள சித்தூரில் கால்வாய் கட்டும் பணி நடந்து வருவதை, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும். ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு, அதனை பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திர அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து இருந்தார். தற்போது பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதற்கு, தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

ராசு
ஜூன் 26, 2024 15:03

சாபாஷ் நாயுடு, நீர் மண்ணின் மைந்தன் ஆதலால் உங்களுக்கு உள்ள உணர்ச்சி இங்குள்ள ஆட்சியாலருக்கு வர வாய்பில்லை!!!


Indhuindian
ஜூன் 26, 2024 10:08

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி. இந்த பக்கம் மேகதாது அந்த பக்கம் பாலார் மன்ஸிலையோ


M S Ranjith
ஜூன் 26, 2024 08:09

Good job Naidu Garu?


Bala
ஜூன் 26, 2024 02:32

தமிலுநாட்டில் தெலுங்கன்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் அவன்கள் தெலுங்கில் சத்தியப் பிரமாணம் வில்லுப்பாட்டுடன் எடுத்தால் தமிழர்களின் நிலை ?.


Vijay D Ratnam
ஜூன் 26, 2024 01:13

நாயுடு காரியத்தில் கண்ணாக இருக்கிறார்.


Venkateswaran Ramamoorthy
ஜூன் 25, 2024 22:19

40ல் தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் பலன் இதுதானா, இந்த அணை கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது ✍️


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 25, 2024 23:23

அவர்கள் கட்டக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை, வரும் தண்ணீரில் பங்குதான் கேட்க முடியும், தமிழகத்தில் ஏன் ஒரு தடுப்பணை கூட இல்லை என்று முதலில் கேளுங்கள்.


Ramesh Sargam
ஜூன் 25, 2024 22:13

மொதல்ல பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடட்டும். பிறகு அணை கட்டலாம். தண்ணியே இல்லையாம். அணை கட்டறாராம்.


theruvasagan
ஜூன் 25, 2024 22:12

ஆந்திர தடுப்பணை கட்டப் போகுதா. ஹையா. ஜாலி. ஆத்துல இனிமே தண்ணியே வராது. நாங்க மணல் அள்ள எந்த தொந்திரவும் இருக்காது.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 25, 2024 22:02

தமிழ்த் தேச மன்னரும் ஆந்திராவைச் சேர்ந்தவரே ..... அவர் சந்திரபாபுவுடன் மாட்லாடி ஆவண செய்வார் ...... கிக்கிக்கீகீ ....


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 21:56

ஓங்கோலுக்கும் அவர்தான் முதல்வர். எனவே ஸ்டாலின் அவரிடம் மாட்லாடி மனதை மாற்றலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை