உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பிக்கை தரும் புற்றுநோய் தடுப்பூசி; முதல் கட்ட சோதனை சக்சஸ்!

நம்பிக்கை தரும் புற்றுநோய் தடுப்பூசி; முதல் கட்ட சோதனை சக்சஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதிய புற்றுநோய் தடுப்பூசி நோயாளிகளுக்கு புது நம்பிக்கையை அளித்துள்ளது. ஆரம்ப கட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட, ஒரு அற்புதமான தடுப்பூசி அதன் முதல் மருத்துவ பரிசோதனைகளிலிருந்து ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசி Moderna Pharmaceuticals நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கிய mRNA நிறுவனம் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த தடுப்பூசி உருவாக்கி உள்ளது.

முதற்கட்ட சோதனை

கோவிட்19 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்படும் எம்.ஆர்.என்.ஏ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்கள் மற்றும் கட்டிகளை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்ட சோதனையில், எட்டு நோயாளிகளுக்கு கட்டிகளின் வளர்ச்சி இல்லை மற்றும் புதிய கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என்பது கண்டறியப்பட்டது.

ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பரிசோதனை புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் தோபாஷிஸ் சர்க்கர் கூறியதாவது: புற்றுநோய் நோய் எதிர்ப்பு சிகிச்சையை மதிப்பிடுவதற்கான இந்த ஆய்வு ஒரு முக்கியமான முதல் படியாகும். தீவிரமான பக்கவிளைவுகள் இல்லாமல் சிகிச்சையை நன்கு பொறுத்துக் கொள்ள முடியும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். புற்றுநோய்க்கு மிகவும் திறம்பட சிகிச்சை அளிக்க உதவும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதையும் நாங்கள் நிரூபித்துள்ளோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று மிக விரைவில் தெரியவரும். இந்த தடுப்பூசிகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

karthikeyan
செப் 15, 2024 16:05

ஏற்கனவே கோவிட் மருந்து அதிக பின்விளைவு இருப்பதாக கூறுகின்றனர், அப்படி இருக்கையில் இதன் பின் விளைவுகள் எப்படியிருக்குமோ? பொறுத்திருந்துபார்ப்போம்.


Pandi Muni
செப் 15, 2024 13:33

அதுதான் உண்மை என்பதே பகுத்தறிவு பன்னாடைகளுக்கு எப்போதுமே புரியாது


Sudha
செப் 15, 2024 12:59

வாழ்த்துக்கள்


Sudha
செப் 15, 2024 12:59

வாயில manasila நல்லதே இருக்காதா


Barakat Ali
செப் 15, 2024 12:07

இறைவனுடைய திட்டங்கள் ரகசியமானவை ..... அவன் கொடுக்க நினைப்பதை யாரும் தடுக்க முடியாது ..... அவன் தடுக்க நினைப்பதை யாரும் கொடுத்துவிட முடியாது ......


aaruthirumalai
செப் 15, 2024 11:58

நலம்பெற என் வாழ்த்துக்கள்!


சமீபத்திய செய்தி