உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., பஸ்களுக்கு புதிய நிறம்

என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., பஸ்களுக்கு புதிய நிறம்

தார்வாட் : ''விரைவில் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பஸ்கள் நிறம் மாற்றப்புடும்,'' என வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பாரத் தெரிவித்தார்.இது தொடர்பாக, ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., எனும் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ், கடந்த 25 ஆண்டுகளாக பச்சை நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இனி புதிதாக சேர்க்கப்படும் பஸ்சின் நிறத்தை சிவப்பு, வெள்ளி நிறமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 40 பஸ்கள் நிறம் மாற்றப்படும். வரும் நாட்களில், 375 பஸ்களும் புதிய நிறத்தில் இயங்கும். என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி.,யின் பஸ்களில் பச்சை உட்பட நான்கு நிறம் பூசப்பட்டிருந்தது. இதனால் பணம் விரயமாகிறது. புதிய பஸ்கள் சிவப்பு, வெள்ளி நிறத்தில் மட்டுமே இருக்கும். இதனால் 50 லட்சம் ரூபாய் பணம் மீதமாகும். இதன் மூலம் நிறுவனத்தின் நிதிச்சுமை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை