உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தது இல்லை; நேரில் பார்த்தவர்கள் பேட்டி

இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தது இல்லை; நேரில் பார்த்தவர்கள் பேட்டி

புதுடில்லி: 'இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தது இல்லை' என டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர். மீட்பு பணியில் ஈடுபட்ட ரயில்வே போலீசார் கூறியதாவது: அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடினர். நாங்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முயற்சி செய்தோம். நாங்கள் கூறியதை மக்கள் கேட்கவில்லை. அதிக எண்ணிக்கையில் பிளாட்பாரத்தில் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டோம். விபத்தை தடுக்க நிர்வாகம் கடுமையாக உழைத்தது. ஆனால் யாரும் கேட்கவில்லை. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க உதவி செய்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரர் சஞ்சய் கூறியதாவது: நாங்கள் 12 பேர் மஹா கும்பமேளாவுக்குச் சென்று கொண்டிருந்தோம். நான் ரயிலின் படிக்கட்டுகளில் இருந்தேன். என் சகோதரி உட்பட என் குடும்பத்தினர் கூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். அரை மணி நேரத்திற்குப் பிறகு, எனது சகோதரி இறந்த நிலையில் அவரது உடலை நாங்கள் கண்டுபிடித்தோம். இவ்வாறு அவர் கூறினார். ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியதாவது: நெரிசலில் என் அம்மா இறந்துவிட்டார். நாங்கள் பீஹார் மாநிலம் சாப்ராவில் உள்ள எங்கள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம். இது ஏன் நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, இவ்வளவு பேர் திடீரென்று வந்து ஒருவரையொருவர் தள்ளிக்கொள்ளத் தொடங்கினர். கூட்ட நெரிசலை கட்டுபடுத்த போலீசார் யாரும் இல்லை, என்றார்.விபத்தை நேரில் பார்த்த மற்றொருவர் கூறுகையில், ' ரயில் நிலையத்தில் எல்லையை மீறி கூட்டம் இருந்தது. இவ்வளவு பெரிய கூட்டம் எதிர்பார்க்கப்படவில்லை. பண்டிகைகளின் போது கூட ரயில் நிலையத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததில்லை. நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் போராடி பார்த்தனர். ஆனால் அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Easwar Kamal
பிப் 17, 2025 00:33

என்றைக்கு திருந்த போறீங்க, அங்க போய் குளிச்சாத்தன் புன்னியமாடா ? இதுல பிரதமமந்திரியில் இருந்து யுயர் பதவியில் உள்ளவர்கள் வரை வரிசை கட்டி நின்றாள், இதை பார்த்து சாதாரண மக்கள் வேகம் எடுக்கிறார்கள்.


Karthik
பிப் 16, 2025 19:20

நாங்கள் குடும்பத்துடன் இரண்டு முறை ரயிலில் வட இந்தியா சுற்றுலா சென்றுள்ளோம். பயணத்தின்போது ரயிலில் ஒருமுறை கூட டிக்கெட் பரிசோதகரை பார்த்ததில்லை .


Vel1954 Palani
பிப் 16, 2025 14:12

வட இந்தியாவில் டில்லியில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து ரயில்களிலும் பெரும்பாலானவர்கள் டிக்கெட்டெ எடுப்பதில்லை. டிக்கெட் பரிசோதகர்களும் உயிருக்கு பயந்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதிக்க மாட்டார்கள். ஏன் என்றால் ரயில் லாலு பிரசாத் யாதவ் தாத்தாவுக்கு சொந்தமானது. எங்க தாத்தா ரயிலில் நான் ஏன் டிக்கெட் எடுக்கணும் என்பார்கள். இன்றும் அதுவே நடை முறையில் உள்ளது.


M Ramachandran
பிப் 16, 2025 11:33

டிக்கெட் கொடுக்கும் போது தெரியாதா?


Ilamaran Malairajan
பிப் 16, 2025 10:58

கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் ரயில் நிலயத்தின் நுழைவாயிலை அடைத்து உள்ளே இருக்கும் கூட்டம் குறைந்த பிறகு அனுமதிக்க வேண்டும். இதை ரயில்வே நிர்வாகம் செய்திருக்க வேண்டும். எப்போதும் நடந்து முடிந்த பிறகு வருந்தி புண்ணியம் இல்லை. வருமுன் காக்க வேண்டும்,


Vel1954 Palani
பிப் 16, 2025 14:26

புது டில்லி ரயில் நிலையத்தில் பதினைந்து பிளாட்பாரம் உள்ளது. பல ஊர்களுக்கு செல்பவர்களும் வருவார்கள். மேலும் பல வழிகள் உள்ளது. யாரையும் தடுக்க முடியாது. அதிகப்படியான ரயில்களை இயங்குவதே சரியான தீர்வாக இருக்கும் .


Raman Viswanathan
பிப் 16, 2025 10:43

நல்லவேளை, தற்போது ஆம்ஆத்மி ஆட்சியில் இல்லை. இருந்திருந்தால் அவர்கள்தான் இதற்கு காரணம் என்று கூறி கூச்சலிடுவார்கள்.


கிஜன்
பிப் 16, 2025 10:37

4 ஸ்பெசல் ரயில் விட்டு மொத்த கூட்டத்தையும் கிளியர் பண்ணிட்டாங்க. இத முதல்லயே செய்திருக்கலாம்.. ஒரு ரயிலுக்கு 1500 பேர் என்று வைத்துக்கொண்டால் கூட 6000 பேர் ஒரே நேரத்தில் ஒரே பிளாட்பாரத்தில் கூடி இருக்கிறார்கள் .... 6000 பேர் கூடியது வரலாறு காணாத கூட்டமாம் ....


சசிக்குமார் திருப்பூர்
பிப் 16, 2025 11:08

1200 பேர் நிற்கும் பிளாட்பாரத்தில் 6000 பேர் என்பது காங்கிரஸ் அடிமைகளுக்கு குறைவுதான்


Rasu
பிப் 16, 2025 10:11

தமிழ்நாட்டில் நடந்தா அரசாங்கம் சரியான ஏற்பாடு செய்யலனு செய்திகளை போடுறீங்க வடக்கே நடந்தா மட்டும் வரலாறு காணாத கூட்டம்னு போடுறீங்க ஏன் இந்த பாகுபாடு?


M.Dharmalingam
பிப் 16, 2025 10:52

அதுதான்...


பாமரன்
பிப் 16, 2025 09:56

இது தான் இந்தியா... நம் நாட்டின் தேவை மக்கள் சேவைக்கான போதுமான பொது போக்குவரத்து வசதிகள்... ஏமாந்தவர்களை கொள்ளையடிக்க மட்டுமே உதவும்... இன்னிக்கு வெளியே வந்துடாம ஒளிஞ்சிருக்கும் ஐஐடி படிச்ச அமிச்சர்... தோ கொடியோட காத்திருக்கும் ஒலகத்தின் ஒரே பெஷல் அரசியல் பட்டப்படிப்பு படித்து அம்பத்தாறு இஞ்ச் காதுகளில் விழுதா...???


s.sivarajan
பிப் 16, 2025 09:53

இதில் யாரை சொல்லியும் பயனில்லை எல்லாம் அவன் செயல்


Venkatesh
பிப் 16, 2025 15:11

கரக்டு... இதுவே தமிழ்நாட்டுல நடந்திருந்தா தி மு க வின் இந்து விரோத செயல் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை