உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய ரிசர்வ் போலீஸ் படை புதிய இயக்குனர் நியமனம்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை புதிய இயக்குனர் நியமனம்

புதுடில்லி : மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி விதுல் குமார் பொறுப்பேற்றார்.சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குனர் ஜெனரலாக, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை தலைவராக இருந்த அனீஷ் தயாள் சிங் கடந்தாண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.நாளையுடன் இவர் பணி நிறைவு பெறுகிறார். இதையடுத்து சி.ஆர்.பி.எப். படைக்கு புதிய தலைமை இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி விதுல் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1993-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ்., கேடர் ஆவார். தற்போது சி.ஆர்.பி.எப். படையின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், புதிய தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி