உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்கள்; வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்

பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்கள்; வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2025ம் ஆண்டு பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்களைக் கண்டது. அவை நமது வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம் அளித்துள்ளன என பிரதமர் மோடி தெரிவித்தார்.இது குறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இந்தியா சீர்திருத்த எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளது. 2025ம் ஆண்டு பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்களைக் கண்டது. அவை நமது வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம் அளித்துள்ளன. அவை வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளை மேம்படுத்தும். நாங்கள் நிறுவனங்களை நவீனமயமாக்கினோம். நிர்வாகத்தை எளிமைப்படுத்தினோம். நீண்டகால, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அடித்தளங்களை வலுப்படுத்தினோம். ஜிஎஸ்டி வரி குறைப்பு, நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் ஆண்டுதோறும் ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாமல் நிவாரணம் பெற்றனர், அதே நேரத்தில் 1961ம் ஆண்டின் காலாவதியான வருமான வரிச் சட்டம் மாற்றப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பயனடையும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இந்தியா, நியூசிலாந்து, ஓமன் மற்றும் பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.அணுசக்தியை பொறுப்புடன் விரிவுபடுத்தவும், தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும், நாட்டின் வளர்ந்து வரும் சுத்தமான எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சாந்தி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராம உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த, 2025ம் ஆண்டு ஜி ராம் ஜி சட்டத்தின் கீழ் கிராமப்புற வேலைவாய்ப்பு 100லிருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை