புதிய சத்தியாகிரகம் தேவை: காங்., வலியுறுத்தல்
பெலகாவி: “பொய்கள் மற்றும் வெறுப்புணர்வை பரப்புவதில் தற்போதைய அரசின் போக்கிற்கு பதிலடியாக, புதிய சத்தியாகிரக போராட்டம் தேவை,'' என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.கர்நாடக மாநிலம் பெல்காவியில் இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், பொதுச்செயலர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் வேணுகோபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.1924ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் அமர்வின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், காங்கிரஸ் தனது காரியக்கமிட்டி கூட்டத்தை இன்றும் நாளையும் பெலகாவியில் நடத்துகிறது.இதில் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:பொய்கள் மற்றும் வெறுப்புணர்வை பரப்புவதில் தற்போதைய அரசிற்கு எதிராக, புதிய சத்தியாகிரகம் நடத்துவது அவசியமாகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன், மகாத்மா காந்தியின் தலைமையில் ஒரு காங்கிரஸ் மாநாடு இதே இடத்தில் நடந்தது.தற்போது, அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்கொள்ள புதிய சத்தியாகிரகம் தேவை என்பதாலேயே இன்று நவ சத்தியாகிரக ஆலோசனை நடத்துகிறோம்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பேசினார்.