உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைவருக்கும் பென்சன் கிடைக்க புது திட்டம்: மத்திய அரசு பரிசீலனை!

அனைவருக்கும் பென்சன் கிடைக்க புது திட்டம்: மத்திய அரசு பரிசீலனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் உள்ள அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் புதிய பென்சன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அரசு மற்றும் சில தனியார் துறை ஊழியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. இதனைத் தவிர்த்து, அடல் பென்சன் யோஜனா( மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலுத்தினால் 60 வயதுக்கு பின்பு பென்சன் கிடைக்கும்) திட்டம், பிரதமர் ஷராம் யோகி மன்தன் யோஜனா என்ற பென்சன் திட்டம் மட்டும் உள்ளது. இருப்பினும், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானம், வீட்டு வேலை, உள்ளிட்டவற்றில் பணிபுரிபவர்கள் அனைவரும் இந்த திட்டங்களினால் பலன் கிடைப்பது இல்லை. இதனையடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பென்சன் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக ' யுனிவர்சல் பென்சன் திட்டம்' ஒன்றை உருவாக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. இதில், தற்போது நடைமுறையில் இருக்கும் தேசிய பென்சன் திட்டம், விருப்ப பென்சன் திட்டம் உள்ளிட்ட அனைத்து பென்சன் திட்டங்களையும் ஒருங்கிணைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.பொது மக்கள் விரும்பினால், இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் எனவும், அரசின் பங்களிப்பு எதுவும் இதில் இருக்காது எனவும் டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
பிப் 27, 2025 02:46

அனைவருக்குமான பென்சன் திட்டம் கண்டிப்பாக தேவை. ஆனால் அது வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம் என்று இருக்க கூடாது. ஒவ்வொரு மாதமும் அனைத்து முதலாளியும் சம்பளத்தில் பத்து சதவீதத்தை கண்டிப்பாக பென்ஷன் திட்டத்தில் போடவேண்டும் என்று சொல்ல வேண்டும். பணமாக ஊதியம் பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதற்காக தான் டிஜிட்டல் இந்தியா தேவைப்படுகிறது. பணத்தை ஒழித்தால், வரி வசூலிப்பது எளிதாக இருக்கும். மேலும் பல திட்டங்களை அமுல்படுத்த முடியும்.


தமிழன்
பிப் 27, 2025 00:44

நாட்டுல 4ல் 3 பேருக்கு நல்ல வேலை கிடையாது குழந்தை பிறந்த உடன் பென்சன் ஆரம்பிச்சு அந்த குழந்தையோட 20 வயசுல பென்சன் பணம் வரும்படி செய்தால் உங்களுக்கு புண்ணியமா போகும் சாமி அத வெச்சு அவன் உருப்பட்டுக்குவான்


kannan
பிப் 26, 2025 22:38

முதலில் EPF பென்ஷன் பெறுபவர்களுக்கு குறைந்த பட்சம் ஓ‌ய்வூ‌திய‌ம் ₹ 1000 என்பதை 5000 என்ற அளவுக்கு உயர்த்துங்கள்.


GMM
பிப் 26, 2025 21:35

யூனிவேர்சல் பென்ஷன் திட்டம். மக்கள் விருப்பம். அரசின் பங்கு இல்லை. அடுத்த ஆளும் ஊழல் கட்சி பராமரிப்பது கடினம். முதலில் 5 ஆண்டுகள் ஆளும் கட்சி 50 ஆண்டு திட்டம் போடுவதை நிறுத்துங்கள். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் காங்கிரஸ் கட்சி ஆயுள் வரை இருக்க வேண்டும். மக்களிடம் சேமிக்கும் பழக்கம் இல்லை. உழைக்கும் வர்க்கத்திடம் போதை பழக்கம். கடனில் பிழைப்பு. முடியாத போது இலவசம், மானியம். முடியும் போது திரும்ப வசூல் முறை. அரசு கருவூலம் எப்போதும் நிரம்பி இருக்க திட்டம் போடுங்கள்.


அப்பாவி
பிப் 26, 2025 21:32

ஆமாங்க எசமான். படிச்சிட்டு வெளில வந்ததும் நல்ல பென்சன் 20 வயசிலிருந்தே குடுக்கற மாதிரி பண்ணுங்க. அதுக்கான பணத்தை பிறக்கும் போதே உருவ ஆரம்பிச்சுடலாம். பிரதான் மந்திரீக்கி பால் பச்சோம் பென்சன் யோஜனான்னு இந்தில பேர் வெச்சுரலாம்.


V Venkatachalam
பிப் 26, 2025 19:30

நம்ம பணத்தை வாங்கி விட்டு நம்மள நல்லா அலைய விடுவாங்க. வழக்கமான லஞ்சம் ஊழல் எல்லாமுமே உண்டு. பெரிய ஓடு ஒண்ணு வாங்கி வச்சுக்கணும்..


Karthik
பிப் 26, 2025 19:22

அமைப்பு சாரா தொழிலாளர்கள் மட்டும் அல்ல... சுய தொழில் sole proprietor செய்வோருக்கும் இது மிகவும் அவசியம்... கடந்த ஆண்டு வருமானம் IT returns ஐ பொறுத்து pension கு வரம்பு நிர்ணயிக்கலாம்... அப்பொழுது தான் அந்த நபர் அதே வாழ்க்கை தரத்தை retirement பிறகு வாழ முடியும்


S. Venugopal
பிப் 26, 2025 18:58

யூ டி ஐ ல் நடந்ததை இன்றும் பலர் மறக்கவில்லை. நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நமது மக்களை இலவு காத்த கிளி போல் ஆக்காமல் இருந்தால் சரி


Thirumal Kumaresan
பிப் 26, 2025 18:35

நல்ல ஆலோசனை விரைந்து கொண்டு வர வேண்டியது, பாராட்டுக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை