மேலும் செய்திகள்
ஐஎஸ்ஐ தொடர்புடைய ஆயுத கடத்தல் கும்பல் கைது; துப்பாக்கிகள் பறிமுதல்
3 hour(s) ago | 4
புதுடில்லி: துபாய் விமான கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தின் கடைசி வினாடி காட்சிகள் கொண்ட புதிய காணொளி வெளியாகி உள்ளது.துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்ட போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம், பின்னர் தரையில் மோதி தீப்பிடித்தது.இந்த விபத்தில் விமானி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். அவரை மறைவை அறிந்த இமாச்சல பிரதேசத்தில் உள்ள சொந்த ஊர் மக்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை அறிவித்து இருந்தது. விமானம் விபத்துக்குள்ளான போது, அதை தொலைவில் இருந்து பார்த்தவர்கள், தங்கள் செல்போன்களில் அந்த சம்பவத்தை படம்பிடித்து இருந்தனர். இந் நிலையில் விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? அதன் கடைசி வினாடி பயணம் எப்படி இருந்தது என்பதற்கான புதிய காணொளி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதிய காணொளியில் நடுவானில் விமானம் சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததும், பல முறை விமானம் சுழன்றபடி பறந்ததும் தெரிய வந்துள்ளது. நடுவானில் விமானம் அசுர வேகத்தில் பறந்து கொண்டு இருக்கும் போதே திடீரென கட்டுப்பாட்டை இழக்கிறது. பின்னர் புகை படிப்படியாக குறைந்து தீப்பிடித்து கீழே இறங்குகிறது.அதன் பின்னர் மேலே எழும்ப முயற்சித்து, மிக குறைந்த உயரத்தில் மீண்டும் கீழ் நோக்கி அசுர வேகத்தில் பறந்து வந்து வெடித்துச் சிதறும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. 52 வினாடிகளே கொண்ட இந்த புதிய காணொளியானது, விபத்தின் கடைசி கட்டத்தில் என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்துவதாக உள்ளது.
3 hour(s) ago | 4