உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த முதல்வர் சதீஷ்: பதாகை ஏந்திய ரசிகர்கள்

அடுத்த முதல்வர் சதீஷ்: பதாகை ஏந்திய ரசிகர்கள்

'அடுத்த முதல்வர்' என்று எழுதப்பட்டு இருந்த அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் புகைப்பட பதாகையுடன், அவரது ஆதரவாளர்கள் மூன்று பேர் கும்பமேளாவில் வலம் வந்தது, காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.கர்நாடக பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி. இவருக்கு முதல்வராகும் ஆசை வந்துள்ளது. '2028 சட்டசபை தேர்தலில் கட்சி வெற்றி பெற்றால், நான் தான் முதல்வர்' என்று கூறி வருகிறார்.இதற்கு துணை முதல்வர் சிவகுமார் தரப்பு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ராம்நகரின் சென்னப்பட்டணாவில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில், 'சிவகுமார், முதல்வர் ஆவார்' என, மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கொளுத்திப் போட்டார்.இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவிற்கு சென்றிருக்கும் சதீஷ் ஜார்கிஹோளியின் ஆதரவாளர்கள் சிலர், தங்கள் தலைவர் அடுத்த முதல்வராக வேண்டி, சிறப்பு பூஜை செய்தனர்.'அடுத்த முதல்வர்' என்ற எழுதப்பட்டு இருந்த அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் புகைப்பட பதாகையுடன் வலம் வந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை