வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏமாற்றியதாக நினைத்து வாழ்ந்திருந்தால் தண்டனை அவசியம்தான். இந்திய அரசு கால அவகாசம் கொடுத்து exit passport வாங்கி கொள்ள சொல்லியும் அலட்சுயமாக இருந்தால் விலங்கிட்டுத்தான்்துரத்த படுவார்கள்
புதுடில்லிஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருந்த மேலும், 487 பேர் விரைவில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளதாக நம் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்தும் பணியில், அந்நாட்டு குடியேற்றத்துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.நம் நாட்டில் இருந்து, 7.25 லட்சம் பேர் முறையான ஆவணங்கள் இன்றி அங்கு தங்கியிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இதில், சிலர் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை நாடு கடத்துவதற்கான குடியேற்றத்துறை உத்தரவு பெற்றவர்கள், படிப்படியாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 104 இந்தியர்கள் சமீபத்தில் நாடு திரும்பினர். இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நம் வெளியுறுவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும்படியும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.அடுத்தபடியாக, நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ள, 487 பேர் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். அதில், 298 பேரின் ஆவணங்களை சரிபார்ப்புக்காக அமெரிக்கா எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.நம் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்வதற்கு ஏற்பாடு செய்யும் கும்பல்களே இந்த சட்டவிரோத குடியேற்றத்திற்கான ஆணிவேராக உள்ளனர். இதற்கு முன் நடந்த நாடு கடத்தல் நடவடிக்கையுடன் ஒப்பிடும் போது, இது சற்று வித்தியா சமானது. இதை, தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்கா விவரித்துள்ளது. எனவே, அவர்கள் ராணுவ விமானத்தை பயன்படுத்தி இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஏமாற்றியதாக நினைத்து வாழ்ந்திருந்தால் தண்டனை அவசியம்தான். இந்திய அரசு கால அவகாசம் கொடுத்து exit passport வாங்கி கொள்ள சொல்லியும் அலட்சுயமாக இருந்தால் விலங்கிட்டுத்தான்்துரத்த படுவார்கள்