உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எழுத்து, எண் அறிவை மேம்படுத்த நிபுண் சங்கல்ப் திட்டம் அறிமுகம்

எழுத்து, எண் அறிவை மேம்படுத்த நிபுண் சங்கல்ப் திட்டம் அறிமுகம்

புதுடில்லி:பள்ளி மாணவ - மாணவியரிடையே அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை வலுப்படுத்த, 'நிபுண் சங்கல்ப்-' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர் தின கொண்டாட்டம் தியாகராஜா மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்தது. கல்வித் துறையின் புதிய முயற்சிகள் மற்றும் புதுமைகள் குறித்த சிறப்புக் கண்காட்சியில், டில்லி அரசின் கல்வி இயக்குநரகம் சார்பில் 11 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன . சி.எம்.ஸ்ரீ பள்ளி, சமக்ர சிக் ஷா மற்றும் வித்யாஞ்சலி, தொழிற்கல்வி, மொழி ஆய்வகம், விளையாட்டுக் கல்வி, நூலகம், சர்தார் படேல் மற்றும் பால பாரதி பள்ளிகள் குறித்து கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், டில்லி முதல்வர் ரேகா குப்தா, டில்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் ஆகியோர் ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்டு, மாணவர்களுடன் உரையாடினர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியரின் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்த 21 கருவிகளைப் பயன்படுத்தி கற்பிக்கும், 'நிபுண் சங்கல்ப்' திட்டம் அறி முகம் செய்யப்பட்டது. முன்னதாக, தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த, 118 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை