உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலையில் பூந்தொட்டி வைத்த நிதிஷ்

ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலையில் பூந்தொட்டி வைத்த நிதிஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா : பீஹாரில், அரசு நிகழ்ச்சியில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வழங்கிய பூந்தொட்டியை, அவரது தலையிலேயே முதல்வர் நிதிஷ் குமார் வைத்த செயல் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாட்னாவில், அரசு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.மாநில கல்வித் துறையின் கூடுதல் முதன்மை செயலரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ்.சித்தார்தா, நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நிதிஷ் குமாருக்கு, பூந்தொட்டி கொடுத்து வரவேற்றார். அதை வாங்கிய நிதிஷ் குமார், யாரும் எதிர்பாராத வகையில், சித்தார்தா தலையில் அந்த பூந்தொட்டியை வைத்து சிரித்தார். இது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. எனினும், முதல்வர் நிதிஷ் குமாரின் இந்த செயலை ஒருதரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அவர் இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது முதன்முறையல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
மே 27, 2025 16:34

பாவம், சேரக் கூடாத இடத்தில் போய் சேர்ந்த பிறகு இப்படி ஆகி விட்டார்!


Palanisamy Sekar
மே 27, 2025 07:03

இது நட்போடு கூடிய செயல்தான் தவிர புண்படுத்தும் அளவுக்கு இதில் ஏதுமில்லை. அன்புடன் உள்ளவர்களால்தான் இப்படியெல்லாம் ஜாலியாக நடந்துகொள்ள முடியும். இதனைப்போய் விமர்சிப்பவர்கள் சிடுமூஞ்சிகள் அல்லது எதிர்க்கட்சியை சார்ந்த நபர்களாகவே இருப்பார்கள்.


Kasimani Baskaran
மே 27, 2025 03:56

இது ஒன்றும் புதிதல்லவே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை