உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றியில் சந்தேகமில்லை: பிரதமர் மோடி உறுதி

பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றியில் சந்தேகமில்லை: பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: '' பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பீஹார் சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் முடிவடைய உள்ள நிலையில், பாஜ பெண் தொண்டர்களுடன் நமோ செயலி வழியாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.அப்போது பிரதமர் கூறியதாவது:முதற்கட்ட தேர்தலுக்கு முன்பு, உங்களின் கடின உழைப்பு மற்றும் அனுபவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களிடம் பேச விரும்பினேன். இந்தத் தேர்தலை நான் கண்காணித்து வருகிறேன். தேஜ கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். தேஜ வெற்றியில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.இந்த முறையும் தேஜ கூட்டணியை வெற்றி பெற செய்வதுடன், 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்குவது என பீஹார் வாக்காளர்கள் முடிவு செய்துவிட்டனர். காட்டாட்சி நடத்திய மக்கள் படுதோல்வியை சந்திப்பார்கள். இதனை பெண் வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும். தேஜ ஆட்சியில் தான் பீஹார் வளர்ச்சி பெறும். பேரணிகளுக்கு ஏராளமான பெண் தொண்டர்கள் வருகின்றனர், பாஜவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புகின்றனர். இந்தத் தேர்தலில் 225 தொகுதிகள் என்ற பெண் தொண்டர்களின் கோஷம் பாராட்டுக்குரியது. பெண்களின் ஓட்டு தேஜ கூட்டணிக்கு கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும்.பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தவும் தேஜ கூட்டணி உறுதிபூண்டுள்ளது.பீஹாரில் இரண்டு இளவரசர்கள் உலா வருகின்றனர். அதில் டில்லியில் இருந்து வந்த ஒருவர், சாத் பண்டிகையை அவமானப்படுத்தினார். மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியவர்களுக்கு வாக்காளர்கள் பதிலடி கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

மனிதன்
நவ 04, 2025 23:07

ஒருவேளை, மெஷினெல்லாம் தொடச்சுவச்ச சந்தோஷத்துலயும், EC யோட அதிரடியான நடவடிக்கைலையும் மயங்கி, ஜி கு தன்னம்பிக்கை கூடிப்போச்சோ என்னவோ ???


vadivelu
நவ 05, 2025 07:15

உங்களாலே இந்துக்கள் அல்லாத மக்களின் வாக்குகளை மொத்தமாக பெற்று, நிதிஷ் 20 ஆண்டு கால ஆட்சியின் சலிப்பின் காரணமான வாக்குகளையும், யாதவ் சாதியின் பெருவாரியான வாக்குகளையும் சேர்த்து 45% வாக்குகளை தேர்தலுக்கு முன்பே பெற்றும் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனால் வெட்கம். கேவலம்


மனிதன்
நவ 05, 2025 16:42

45% வாக்குகளை தேர்தலுக்கு முன்பே பெற்றும் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனால்..........///// நன்றி நண்பா..இதைத்தான் நாங்களும் சொல்கிறோம், வெற்றி பெற முடியாமல் போனால், காரணம் என்னவாக இருக்கும்????? சிந்தி....


ஜெய்ஹிந்த்புரம்
நவ 04, 2025 21:59

வாய்ப்பில்லை ராஜா தான்


vadivelu
நவ 05, 2025 07:19

உண்மை. தேஜஸ்வி, ராகுல் கூட்டணியிடம் மொத்தமாக இந்துக்கள் அல்லாதரின் எல்லா வாக்குகளும், யாதவ் சாதியினரின் பெரும்பாலான வாக்குகளும் உள்ளது. இதுவே 45% வாக்குகள். இத்தனை தேர்தலுக்கு முன்பே கையில் இருந்தும் வெற்றி பெறா விட்டால் இனி எப்போதுமே எதிர் கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை.


vivek
நவ 05, 2025 08:33

தேர்தல் முடிவு வந்தவுடன் தலைமறைவு......


தாமரை மலர்கிறது
நவ 04, 2025 20:34

பீகார் மற்றும் தமிழகத்தில் பிஜேபி தலைமையிலான அணி வெற்றிபெறுவது உறுதி.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 04, 2025 21:59

கனவு கலர் கலரா தெரியுதாக்கும்?


பேசும் தமிழன்
நவ 04, 2025 19:49

நாட்டு மக்களில் நல்லவர்கள் எல்லாம் உங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள்.... அதனால் வெற்றி உங்களுக்கே கிடைக்கும்.... மற்றவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள்.


Rahim
நவ 04, 2025 19:28

ஞானேஷ்வர் குமார் என்ற அடிமை இருக்கும் தைரியத்தில் பேசுகிறார்.


vadivelu
நவ 05, 2025 07:20

இதற்கே உன் மீது அவமதிப்பு வழக்கு போடலாம். இப்படி பேசி கொண்டு இருந்தால், அவர் போனால் இன்னொருவர் வருவார், எப்ப நீங்க வெற்றி பெறுவது.


Rahim
நவ 04, 2025 19:25

ஒரு சில வார்த்தைகளை விட்டால் வேறு எதுவும் தெரியாது....


vivek
நவ 04, 2025 22:44

ஒட்டகம் மேய்க்க தான் லாயக்கு...


மனிதன்
நவ 04, 2025 22:57

நம்ம ஜிய இப்படியெல்லாம் கேவலப்படுத்தக்கூடாது...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 04, 2025 19:06

சார் இப்படி சொல்லி தான் அகிலி பார் சார்சோ பார் னு சொன்னது கிழிஞ்சி போச்சி ,தமிழ் நாட்டில் டெபாசிட் கேள்வி குறி ஆச்சி , இப்போ எங்க விடியல் அங்க பிரச்சாரம் , இங்க நீங்க தமிழனை பிஹாரில் இழிவு படுத்தி பேசினீர்கள்ன்னு ஊர் பூராம் சொல்லிட்டு திரியறானுங்க , நாம டெபாசிட் வாங்குவோமா ?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 04:46

நாம டெபாசிட் வாங்குவோமா ? - பேராசை


சமீபத்திய செய்தி