உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரவு 11 முதல் காலை 11 மணி வரை: சிறார்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை: தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு

இரவு 11 முதல் காலை 11 மணி வரை: சிறார்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை: தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐதராபாத்: தெலுங்கானாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ தியேட்டருக்குள் அனுமதிக்கக் கூடாது என தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த டிசம்பரில் தெலுங்கானாவில் உள்ள தியேட்டரில் அதிகாலை ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்திருந்த நடிகர் அல்லு அர்ஜூனை பார்க்க பெருமளவு கூட்டம் கூடியது. இதில் ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஐதராபாத் போலீசார், அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டது.திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி விஜய்சென் ரெட்டி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ தியேட்டருக்குள் அனுமதிக்கக் கூடாது என தியேட்டர்களுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும் உத்தரவிட்டார். அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து தெரிவித்ததுடன், வழக்கை பிப்.,22க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

visu
ஜன 28, 2025 18:09

எல்லா திரையரங்குகளை மூடி விட்டு OTT இல் எல்லோரையும் படம் பார்த்து கொள்ள சொல்லிவிடலாம் மக்களுக்கு செலவும் குறையும் துல்லியமான வரவு செலவு கணக்கும் கிடைக்கும் பாதுகாப்பு போக்குவரத்துக்கு நெரிசல் என்று பலவும் குறையும் மக்களுக்கும் செலவு மிக குறையும்


R S BALA
ஜன 28, 2025 16:32

அந்த நேரத்தில் செல்போன் பார்க்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை