உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதமாற்றத்தில் ஈடுபட்டால்... என்.ஜி.ஓ.,க்களுக்கு எச்சரிக்கை!

மதமாற்றத்தில் ஈடுபட்டால்... என்.ஜி.ஓ.,க்களுக்கு எச்சரிக்கை!

புதுடில்லி: 'மதமாற்றம் உட்பட அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால், என்.ஜி.ஓ.,க்களுக்கான வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப் பதிவு ரத்து செய்யப் படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.நாட்டில் செயல்படும் பெரும்பாலான என்.ஜி.ஓ.,க்கள் எனப் படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளி நாடுகளில் இருந்து நிதியுதவி வருகிறது. இதை பெறுவதற்கு,எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வாயிலாக, அனைத்து என்.ஜி.ஒ.,க்களும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது: சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத மாற்றத் தில் ஈடுபடுவதாகவும்,பயங்கரவாத அமைப்பு களுடன் தொடர்பு வைத் துள்ளதாகவும், அரசுக்கு எதிரான போராட்டங் களை துாண்டுவதாகவும் புகார்கள் வருகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடு படுவது உறுதி செய்யப் பட்டால், அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள வெளி நாட்டு நன்கொடை ஒழுங் குமுறை அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sivakumar
நவ 12, 2024 19:51

மனம் மாறியபின் மதம் மாறினால் எந்த தவறும் இல்லை, எந்த அரசும் அதில் தலையிடுவது சரியாகாது. ஒருவர் தான் சார்ந்த மதத்தை பற்றி நல்லது மற்றும் நல்லது அல்லாததுகளை சொல்லவும் உரிமை இருக்கணும், அதுதான் மத சுதந்திரம். காசுக்காக மதம் மாறுபவர்கள் எந்த மதத்திலும் நிலையாக இருக்க மாட்டார்கள். இன்று காசுக்காக, நாளை வேலைவாய்ப்புக்காக, அடுத்தநாள் திருமண வாய்ப்புக்காக, அடுத்தநாள் சமுதாய அந்தஸ்துக்காக. இவர்களுக்காக எந்த அரசும், மத அமைப்புகளும் மறுவினை ஆற்றவேண்டிய அவசியம் இல்லை.


Pattabiraman Vengeteraman
நவ 12, 2024 18:48

அப்படியானால் இந்த சிறுபான்மை என்று சொல்லிக் கொண்டு பெரும்பான்மையாக மாற்றி வரும் கூட்டத்திற்கு குடை பிடிக்கும் இந்தி கூட்டணியை என்ன செய்வது. இவர்களை அடக்கினால் தானாக மதமாற்றும் முயற்சி குறைந்துவிடும்


Kumar Kumzi
நவ 12, 2024 14:49

என் ஜி ஓ க்கள் என்றாலே மத மாற்றம் செய்யும் கம்பெனிகள் தானே இதுல என்ன சந்தேகம்


Dharmavaan
நவ 12, 2024 12:31

பிஜேபி ள்ளவற்றிலும் மெத்தனம் சட்ட வழி என்று இழுக்கிறது நடைமுறைக்கு ஒத்துவராது புள்டோஸர் வழியே சிறந்தது .


Ramesh Sargam
நவ 12, 2024 12:30

கட்டாய மதமாற்றம் செய்பவர்களை பிடித்து சிறையில் அடைக்கவும். அல்லது அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அவர்களை மொத்தமாக மாற்றம் செய்யவும். இந்தியாவில் அவர்கள் இருக்கக்கூடாது.


Barakat Ali
நவ 12, 2024 11:50

ஏற்கனவே உள்துறை அமைச்சகம் மதமாற்றிகளின் பியூஸை புடிங்கிருச்சு என்று எட்டாண்டுகளுக்கு முன்பே செய்தி வந்துச்சேங்காணும் ????


Venkatesan
நவ 12, 2024 14:05

மதமாற்றிகள் பல வழிகளில் பல உருவங்களில் வருவார்கள். இது ஒரு தொடரும் சம்பவம். ஆனால் பல மதமாற்றிகளுக்கு பியூஸ் புடுங்குனது உண்மை தான்.


சிவம்
நவ 12, 2024 11:39

இது என்ன எச்சரிக்கையோ. மத மாற்றத்தில் ஈடுபடும் நபர்கள் பற்றி பல வீடியோக்கள் முகநூல், வாட்ஸ்அப்பில் தினமும் வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாதா? புகார்கள் வருகிறது. அதன் மேல் நடவடிக்கை. புகார்களுக்கு ஆதாரம், சாட்சிகள், கீழ் கோர்ட், மேல் கோர்ட் என்று பழைய முறையிலேயே சென்று கொண்டிருந்தால் நாடு உருபடாமல் போய் கொண்டிருக்கும். சிறு குற்றங்கள் முதல் கிரிமினல் குற்றங்கள் வரை அனைத்தையும் விரைவாக விசாரித்து தண்டனை அளிக்க தற்போது இயலும். தற்போது மக்கள் அனைவரும் கேமராவுடந்தான் நடமாடுகின்றனர். வீடியோ ஆதாரத்தை விட சிறந்த ஆதாரம் வேறு இருக்க முடியாது. எனவே மத்திய மாநில அரசாங்கங்கள் பொது மக்களையே (பதிவு செய்யப்பட்ட) உளவு வேலைக்கு பயன்படுத்தினால், காவல் துறை, நீதிமன்றம் இவைகளின் நேரம் பெருமளவு மிச்சமாகும். சிந்திப்பார்களா??


இசக்கிமுத்து,தூத்துக்குடி
நவ 12, 2024 11:30

இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவின் அரசாங்கத்துக்கே இப்படி மிகக் கடுமையான ஒரு நடவடிக்கையை எடுக்க பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது ஆனால் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளான NGO க்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை உடனே இங்கு செயல்படுத்தி விடுகிறார்கள் அதை அவர்கள் தவறவிடுதே இல்லை.


Muralidharan raghavan
நவ 12, 2024 11:22

கண்டிப்பாக செய்யவேண்டும். ஏனெனில் மதமாற்றம் மட்டுமன்றி பலசமயங்களில் இவர்கள் நமது தொழில்துறைக்கு எதிராக செயல்பட்டு வெளிநாட்டு தொழில்துறையினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.


சமீபத்திய செய்தி