உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியை கண்டு பயமில்லை: ராகுல்

பிரதமர் மோடியை கண்டு பயமில்லை: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோடா: '' பிரதமர் மோடியை கண்டு எங்களுக்கு பயமில்லை,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டாம் கட்டமாக நவ.,20ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோடா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி அரசியல் சாசனத்தை படித்திருந்தால், அவர் வெறுப்புணர்வு, பிரிவினை ஆகியவற்றை சமூகத்தில் பரப்ப மாட்டார்.மும்பையின் தாராவியில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பு நிலத்தை அதானியிடம் கொடுக்க முயற்சிக்கிறார். அதானிக்கு உதவ வேண்டும் என்பதற்காக, மஹாராஷ்டிராவில் காங்., கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது. பிரதமர் மோடியை கண்டு எங்களுக்கு பயமில்லை. அவர் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக உள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும். இவ்வாறு ராகுல் பேசினார்.பிறகு, ஷிம்தேகா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசுகையில்,ஏழைகளை மதிப்பதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. இந்தியாவின் முகத்தை ஜாதிவாரி கணக்கெடுப்பு மாற்றும். பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தெளிவாக காட்டும். இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் தான் உச்சவரம்பு என்பதை அகற்றுவோம். இதற்காக பிரதமர் மோடி என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

காத்திருப்பு

பிரசார கூட்டத்தை முடித்துக் கொண்டு கோடா நகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் கிளம்ப இருந்தார். ஆனால், ஹெலிகாப்டருக்கு கிளம்ப விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து உரிய அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அங்கு அவர் காத்து இருந்தார். சுமார் 45 நிமிடங்கள் பிறகே, ஹெலிகாப்டர் கிளம்பி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதன் பிறகு ராகுல் கிளம்பி சென்றார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ராகுலின் தேர்தல் பிரசாரத்தை முடக்கும் முயற்சி இது எனக்கூறியுள்ளது. மேலும், பிரதமர் மோடி தியோகார்க் நகரில் இருந்தார். இதனால் ஹெலிகாப்டர் கிளம்ப அனுமதிக்கப்படவில்லை. இது வழக்கமான நடைமுறை. ஆனால் 70 ஆண்டுகள் நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் எந்த எதிர்க்கட்சி தலைவருக்கும் இதுபோன்று நடந்தது இல்லை என அக்கட்சி தலைவர் ஒருவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ganesun Iyer
நவ 15, 2024 22:37

கைபேசில உலக அறிவு இருக்கு சரி , உங்க பப்புக்கு இருக்கா?


Velayutham rajeswaran
நவ 15, 2024 21:28

பிரதமரைக் கண்டு பயம் வேண்டாம் இந்திய மக்களின் நேர்மையான குரலுக்கு பயந்தால் போதும்.


kuruvi
நவ 15, 2024 21:26

அரசியல் சாசனம் ஒரு காட்சி பொருள் அல்ல .அதில் இருக்கும் எல்லா சட்ட வரைவுகளையும் நீங்கள் படித்திருந்தால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் தவருகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கமாட்டீர்கள் .நீங்கள் சட்டத்தை மதித்து நடக்கும்போது தான் மற்றவகளை கேட்கமுடியும்.சட்டணிபுணர்கள் எல்லாம் சட்ட மீறல்களை யாராவது பணம் கொடுத்தால் மட்டுமே கேட்பார்களா?எப்படி தேர்தல் கமிஷனும் கண்டுகொள்வதில்லை.


SVR
நவ 15, 2024 19:40

அரசியலில் பயமில்லை பயமில்லை என்று சொன்னால் பயம் இருக்கிறது பயம் இருக்கிறது என்று எடுத்து கொள்ள வேண்டும். அப்படித்தான் அதற்கு அர்த்தம். நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் மோதி ஏனோ இவரை வெளியில் விட்டு வைத்திருக்கிறார். அவர் சத்தமே இல்லாமல் வேலை செய்து வருகிறார் என்று மட்டும் புலப்படுகிறது. சரியான நேரத்திற்கு காத்துகொண்டிருக்கிரார் என்றும் அறிய முடிகிறது. மக்களே விழித்தெழுங்கள். இவர்களின் திட்டத்தை தகர்த்து எறியுங்கள்.


nagendhiran
நவ 15, 2024 18:51

பயம் இல்லைனா ஏன் கட்சிகாரனை நிறுத்தாமல் குடும்ப ஆட்களை"தேர்தலில் நிற்க வைக்குறீங்க?


sankar
நவ 15, 2024 18:48

இண்டியின் - டெல்லி பப்பு - சென்னை பப்பு - இரண்டுமே தத்திகள் - எழுதிக்கொடுத்ததைக்கூட ஒழுங்கா படிக்க தெரியாதவர்கள்


Nandakumar Naidu.
நவ 15, 2024 18:42

இந்த தொல்லை என்று ஒழியுமோ தெரியவில்லை. இவரெல்லாம் நாட்டிற்கும், சமூகத்திற்கும், வீட்டிற்கும் கேடு. அழிக்க பட வேண்டிய தீய சக்தி.


bgm
நவ 15, 2024 18:41

அப்போ எமர்ஜென்ஸி, அரசியல் அமைப்பு பிரிவு 356 எத்தனை முறை பயன்படுத்த பட்டது? பப்பு அவர்கள் விளக்குவரா?


Satish NMoorthy
நவ 15, 2024 18:40

Just by saying that pappu is afraid of PM Modi


Duruvesan
நவ 15, 2024 18:26

பாஸ் உங்களுகு ஒரு எழவும் தெரியாது. Constitution of india புக் நீ சின்ன டைரி மாறி வெச்சி கீரே, சரி பஞ்சாயத்து எந்த section, sub, page ennannu சொல்ல முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை