உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹெல்மெட் இல்லையா, பெட்ரோலும் இல்லை: இந்தூரில் நடைமுறைக்கு வந்தது புதிய விதி

ஹெல்மெட் இல்லையா, பெட்ரோலும் இல்லை: இந்தூரில் நடைமுறைக்கு வந்தது புதிய விதி

இந்தூர்; இந்தூரில், ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதி தற்போது அமலுக்கு வந்துள்ளது.இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தி வருகின்றன. சில மாநிலங்களில் இந்த நடைமுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் உத்தரவாகவும், சில மாநிலங்களில் அறிவுறுத்தலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களின் சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.1) முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வினியோகிக்க வேண்டும் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.இதற்காக சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முறையாக செயல்படுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, ஹெல்மெட் இல்லாமல் வந்த வாகன ஓட்டிக்கு பெட்ரோல் தந்ததால் அரந்தியா பைபாஸ் சாலையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 01, 2025 22:14

நமது தமிழ்நாடா இருந்தால் அந்த பெட்ரோல் பங்குகளுக்கு சிறிய தொலைவில் ஒரு சிலர் ஹெல்மெட் வாடகைக்கு என்று போர்டு வைத்து, பெட்ரோல் போடும் வரை ஹெல்மட் வாடகைக்கு விடுவார்கள். பெட்ரோல் போட்டுகொண்டுவந்து ஹெல்மட்டை திரும்பக்கொடுத்து செல்லவேண்டும். அதற்கு ஒரு கட்டணம் வசூலிப்பார்கள். ஒரு சிலர் ஹெல்மெட்டுடன் ஓடிவிடலாம். ஆகையால் முன்னெச்சரிக்கையாக ஏதாவது டெபாசிட் பெற்றுக்கொள்வார்கள். இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை