டில்லியில் மருத்துவமனைகளில் ஐ.சி.யூ., கழிப்பறைகள், பிணவறை இல்லை; சி.ஏ.ஜி., அறிக்கையில் தகவல்
புதுடில்லி: டில்லியில் உள்ள 14 மருத்துவமனைகளில் ஐ.சி.யூ, கழிப்பறைகள், பிணவறை வசதி இல்லை என்பது சுகாதார உள்கட்டமைப்பு குறித்து சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரியவந்துள்ளது.டில்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. டில்லி சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. சட்டசபையில் தாக்கல் செய்ய சுகாதார உள்கட்டமைப்பு குறித்து சி.ஏ.ஜி., அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r1cl0gtn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* பல மருத்துவமனைகளில் முக்கியமான சேவைகள் இல்லை. நகரத்தில் உள்ள 27 மருத்துவமனைகளில், 14 மருத்துவமனைகளில் ஐ.சி.யு., வசதிகள் இல்லை. 16 மருத்துவமனைகளில் ரத்த வங்கிகள் இல்லை. * அதுமட்டுமின்றி எட்டு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விநியோகம் இல்லை. 15 மருத்துவமனைகளில் பிணவறை இல்லை. 12 மருத்துவமனைகள் ஆம்புலன்ஸ் சேவைகள் இல்லாமல் இயங்கி வருகின்றன.* பல மொஹல்லா மருத்துவமனைகளில் கழிப்பறைகள், உட்பட அத்தியாவசிய வசதிகள் இல்லை. * சுகாதாரப் பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. 21 சதவீத செவிலியர்கள் பற்றாக்குறை, 38 சதவீத துணை மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் சில மருத்துவமனைகளில் 96 சதவீத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை உள்ளது.அவசர சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை.* கோவிட்-19 மீட்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.787.91 கோடியில் ரூ.582.84 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சுகாதாரப் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.30.52 கோடி செலவிடப்படாமல் இருந்தது. இவ்வாறு சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சி.ஏ.ஜி., அறிக்கை இன்று டில்லி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு, முதல்வர் ரேகா குப்தா டில்லி மதுபான கொள்கை குறித்து சி.ஏ.ஜி., அறிக்கையை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.