உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்: பிரதமர் மோடி திட்டவட்டம்

எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்: பிரதமர் மோடி திட்டவட்டம்

ஆமதாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த வரிகளை மறைமுகமாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, 'எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்' என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று உலகில், அனைவரும் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்ட அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். இந்த ஆமதாபாத் மண்ணிலிருந்து, எனது சிறு தொழில் முனைவோர், எனது சிறு கடைக்காரர் சகோதர சகோதரிகள், எனது விவசாய சகோதர சகோதரிகள், எனது கால்நடை வளர்ப்பு சகோதர சகோதரிகளுக்கு சொல்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aymatm3j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தீங்கு ஏற்படாது

உங்கள் நலன்கள் எனக்கு மிக முக்கியமானவை. சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு எந்தத் தீங்கும் ஏற்பட எனது அரசாங்கம் ஒருபோதும் விடாது. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், தாங்கும் வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம். எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்.

விட்டு வைக்க மாட்டோம்!

பயங்கரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும், இந்தியா விட்டுவைக்காது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எவ்வாறு பழி வாங்கியது என்பதை உலகம் கண்டது. பயங்கரவாதிகளை வெறும் 22 நிமிடங்களில் பாதுகாப்பு படையினர் அழித்தார்கள்.

பாதுகாப்பான நகரம்

நாங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் உள்ளே சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம். குஜராத்தில் அனைத்து வகையான தொழில்களும் விரிவடைந்து வருகின்றன. நமது மாநிலம் உற்பத்தி மையமாக மாறியிருப்பதைக் கண்டு முழு குஜராத்தும் பெருமை கொள்கிறது. ஆமதாபாத் நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
ஆக 26, 2025 08:26

ஒரு பருவ மழை பெய்யலேன்னா எல்லா நாடுகள் கிட்டேருந்தும் இம்போர்ட் பண்ண வேண்டியிருக்கும்.


அப்பாவி
ஆக 26, 2025 08:25

அப்ப பருத்தி விவசாயிகள் கார்ப்பரேட்களா?


Mani . V
ஆக 26, 2025 05:24

அப்ப இந்த மீத்தேன் ஈத்தேன் மலைத்தேன் திட்டங்கள், பரந்தூர் விமான நிலைய கட்டுமானம் எல்லாம் கைவிடப்படுமா?


Kasimani Baskaran
ஆக 26, 2025 04:04

அப்படியே உள்ளூர் கபட வேடதாரிகளையும் சிறிது கவனிக்க வேண்டும்.


M Ramachandran
ஆக 26, 2025 01:09

பந்தா பேச்செல்லாம் வேனாம். இஙகு தமிழக அமைச்சர் மேல் பெரிதாக என்னவோ நடவடிக்கை என்று பீலா உட்டீங்க இரண்டு வருஷங்கலாகியும் அது புஸ் வாணாம் தானா


mindum vasantham
ஆக 25, 2025 22:04

எனக்கு தெரிந்து ஜாதி ரீதியாக கல்யாணம் செய்வது வீண் , அழகு என்பது இக்காலத்தில் பணத்தை விட உயர்வாக உள்ளது , இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வந்தேறிகள் என்பதால் வெண்மை நிறத்தில் உள்ளனர் , இவர்களுக்கு அடுத்து மார்வாடிகள் , ரெட்டியார் , நாயுடு , ஐயர் , பூர்வகுடிகளுக்கு வேலைவாய்ப்பு சமூக சூழல் பழக்கம் போன்றவை என்ன ஆவது வெள்ளையா இருப்பவன் நல்லவன் என்ற எண்ணம் உள்ளது , உண்மையில் அதிக வந்தேறி ரத்தம் ஓடுவது முஸ்லிம்களிடம் தான் இவர்கள் நிறம் தனி


pakalavan
ஆக 25, 2025 21:51

3 வேளாண் சட்டத்தை போட்டது நீ மறந்துட்டீங்களா ? பிறகு எலக்சனுக்காக அதை வாபஸ் வாங்கியது நீங்கதானே


Kasimani Baskaran
ஆக 26, 2025 04:06

விவசாயத்தை செழிக்க வைக்க வேண்டும் என்றால் இடைத்தரகர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது மோடியின் கோட்பாடு. காங்கிரஸ் இடைத்தரகர்கள் மட்டும் வாழவேண்டும் என்று மட்டுமே விரும்புகிறது.


ஆரூர் ரங்
ஆக 25, 2025 21:39

அப்படியே பரந்தூர் விவசாயிகள் மேட்டரையும் கவனிக்கச் சொல்லுங்க. எட்டு வழிச்சாலையை எதிர்த்த ஸ்டாலினின் அட்டூழியம்.


Priyan Vadanad
ஆக 26, 2025 00:03

Okay done


vivek
ஆக 26, 2025 05:53

are you happy tasmac priyan...run to tasmac


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை