வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாநில இட ஒதுக்கீடு மத்திய அரசின் கீழ் எப்படி வரும்?
மேற்கு வங்க ஆசிரியர் தேர்வு வாரியம், முறைகேடாக பணியில் சேர்ந்த 1,804 ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் ஏற்கனவே வாரியத்திடம் இருந்தது என்றால், ஏன் நீதிமன்ற விசாரணையில் வெளியிடவில்லை? இந்த ஊழலால் மம்தா பானர்ஜி, முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். சுகந்த மஜும்தார் மத்திய அமைச்சர், பா.ஜ.,யாருக்கான சட்டம்?
மத்திய - மாநில அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் ஆகியோர் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால், பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்காக இல்லை; கூட்டணியில் உள்ள கட்சியினரை மிரட்டுவதற்கான சட்டம். மணீஷ் திவாரி லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
அமித் ஷாவின் பொறுப்பு! மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இட ஒதுக்கீடு விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே, இந்த போராட்டத்துக்கு அத்துறையின் அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும். சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., சிவசேனா உத்தவ் பிரிவு
மாநில இட ஒதுக்கீடு மத்திய அரசின் கீழ் எப்படி வரும்?