உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் வரி மிரட்டலுக்கு அடி பணிய வேண்டியதில்லை: சசிதரூர்: பலர் உண்டு நமக்கு!

டிரம்ப் வரி மிரட்டலுக்கு அடி பணிய வேண்டியதில்லை: சசிதரூர்: பலர் உண்டு நமக்கு!

புதுடில்லி : இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக, 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், ''இந்த வரி மிரட்டலுக்கு அடிபணிய வேண்டிய அவசியமே இல்லை,'' என ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார் காங்., - எம்.பி., சசி தரூர். ''வர்த்தகத்திற்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை; பல நாடுகள் நமக்காக இருக்கின்றன,'' என அவர் கூறியுள்ளார். மேலும், ''எங்கள் நாட்டு அரசு, வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒரு கோமாளியிடம் சிக்கியுள்ளது,'' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிண்டலடித்துள்ளார். 'இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதிக்கப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கும் டிரம்ப் நமக்கு அபராதம் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர் என பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், ''அமெரிக்காவின் இந்த பொருளாதார மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணிய வேண்டிய அவசியமே இல்லை,'' என காங்., - எம்.பி., சசி தரூர் தெளிவா க கூறியிருக்கிறார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க அதிபர் டிரம்ப், 25 சதவீத வரியை இந்தியாவுக்கு விதித்திருக்கிறார். தற்போது டிரம்ப், பாகிஸ் தானுக்கு சாதகமாக செயல்பட துவங்கி விட்டார். உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிக வரி விதிப்பதாக டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. இதனால் வர்த்தக தடை ஏற்படுவதாகவும் அவர் விமர்சிப்பது, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களுக்கு நிச்சயம் பொருந்தாது. ரஷ்யாவுடன் இருக்கும் நீண்டகால நட்புறவை பலவீனப்படுத்தவே, அதிபர் டிரம்ப் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பு என்பது ஆழமான தேச நலனை அடிப்படையாக கொண்டது. குறிப்பாக எரிபொருள் மற்றும் ராணுவ துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இந்த நட்பு என்பது பிற நாடுகளை மிரட்டுவதற்காக அமைந்தது அல்ல. உலகளாவிய அரசியல் விவகாரங்களில் இருந்து இந்தியாவை தள்ளி வைக்க முயல்வது, இந்தியாவின் தன்னாட்சி மற்றும் சுயமாக முடிவெடுக்கும் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவது போல் ஆகும். அமெரிக்காவின், 25 சதவீத வரி விதிப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக இந்தியா அடிபணிந்து விடக் கூடாது. அமெரிக்காவின் இந்த வரி உயர்வு, 7.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்திய ஏற்றுமதிக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி துறையில் போட்டியாக இருக்கும் வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளை விட, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி சற்று அதிகமானது தான். இது பாகிஸ்தானுக்கு சாதகம் செய்வது போன்றது. ரத்தினங்கள், நகை, ஸ்டீல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இந்திய துறைகளையும் வெகுவாக பாதிக்கவே செய்யும். இதனால் வேலையிழப்பு ஏற்படும். குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளை பாதிக்கும். அமெரிக்காவின் இந்த அழுத்தத்திற்கு பயந்தால் மிகப் பெரிய அளவில் தவறு நிகழலாம். எனவே, இந்தியா தன் வெளியுறவு கொள்கை தொடர்பான உரிமையை எந்த காலத்திலும் விட்டுத் தரக் கூடாது. தேச நலனுக்கு எதிரான விஷயங்களை அடியோடு வேரறுக்கவும் தயங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். அதே போல், ''வெள்ளை மாளிகை கோமாளி,'' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி, அமெரிக்க அதிபர் டிரம்பை கேலி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்றே இந்த வரி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் நேரடி அந்நிய முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எங்கள் நாட்டின் அரசு வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒரு கோமாளியிடம் சிக்கியிருப்பதை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. ரஷ்யாவுடன் நாம் வைத்திருக்கும் வர்த்தகத்திற்கு அபராதம் விதிக்கும் வகையிலேயே இந்தியா மீது, 25 சதவீத வரி விதிப்பை டிரம்ப் சுமத்தி இருக்கிறார். இந்தியா சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. எந்தவொரு மன்னர்கள் முன்பாகவும் அடிமை போல சலாம் போட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

'அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்க கூடாது!'

அமெரிக்காவின் வரி அழுத்தத்தை சமாளிக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சசி தரூர் கூறிய சில ஆலோசனைகள் முதலில் துாதரக ரீதியிலான விவகாரங்களை விட்டுத் தராமல் உறுதியுடன் இருக்க வேண்டும். அதாவது இந்தியாவின் வெளியுறவு கொள்கை, தற்போது இருப்பது போல தேச நலனை அடிப்படையாக கொண்டே இருக்க வேண்டும். வெளியில் இருந்து வரும் அழுத்தங்களுக்காக, வெளியுறவு கொள்கைக்கான இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.அதே சமயம், வர்த்தகம் தொடர்பான பேச்சுகள் வலுவாக நடக்க வேண்டும். வேளாண் மற்றும் தரவுகள் துறையின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். எதற்காகவும் அதை விட்டுத் தரக்கூடாது இரண்டாவதாக, ஏற்றுமதிக்காக அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜப்பான், 'ஆசியான்' மற்றும் பிற தெற்காசிய நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மூன்றாவதாக சர்வதேச போட்டிகளை சமாளிக்கும் வகையில் உள்நாட்டின் திறன் வளர்ப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது அவசியம். அதே போல் புற சவால்களை ஓரங்கட்டிவிட்டு, இந்திய ஏற்றுமதி துறையை இப்போது இருப்பது போலவே நீடிக்க வைக்க வேண்டும் கடைசியாக உலக வர்த்தக அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் சட்ட ரீதியாக தீர்வு காணும் முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இதற்காக சர்வதேச வர்த்தக முறைகளில் நியாயமான விதிகள் வகுக்க வேண்டும் என்ற குரலை இந்தியா தொடர்ந்து ஒலிக்க வேண்டும்.

'செத்த பொருளாதாரமா? கொன்றதே மோடிதான்!'

இந்தியா, ரஷ்யாவின் பொருளாதாரம் செத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கு காங்., எம்.பி.,யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் செத்துவிட்டதாக டிரம்ப் கூறுவது உண்மை தான். பிரதமர் மற்றும் நிதியமைச்சரை தவிர மற்ற அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்துள்ளது. இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது. அதை கொன்றவர் மோடி. அதானி - மோடி கூட்டுறவு, பணமதிப்பிழப்பு மற்றும் மோசமான ஜி.எஸ்.டி., வரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டது, விவசாயிகள் நசுக்கப்பட்டது ஆகிய காரணங்களால் இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது. இந்த உண்மையை சொன்னதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பை நான் பாராட்டுகிறேன். பெரும் பணக்காரான அதானியை மட்டும் வாழவைக்க, பிரதமர் மோடி இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். தற்போது இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஒப்பந்தம் இழுபறி ஏன்?

இந்தியாவின் வேளாண் மற்றும் பால் பொருட்கள் சந்தையை திறந்து விடும்படி அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால், கோடிக்கணக்கான ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதால் அதை ஏற்க இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்காவில் அசைவ தீவனங்கள் அளித்து வளர்க்கப்படும் பசுக்களின் பால், பால் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யவும் தொடர் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இது மத உணர்வுகள், கலாசார, பண்பாட்டு வழக்கத்துக்கு எதிரானது என்பது காரணம். இயற்கை தீவனங்களை உண்டு வாழும் கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால், பால் பொருட்கள் என்ற சான்றிதழ் தரப்பட்டால், இறக்குமதியை அனுமதிப்பது பற்றி பரிசீலிப்பதாகவும் இந்தியா தரப்பில் கூறப்படுவதாக தெரிகிறது. மக்காசோளம், சோயாபீன், கோதுமை, எத்தனால் ஆகியவற்றின் இறக்குமதியை அனுமதிக்கவும் இந்தியா தயக்கம் காட்டி வருகிறது. மேலும், பல பொருட்கள் மீதான அமெரிக்க இறக்குமதி வரியை குறைக்கவும் இந்தியா விடுக்கும் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலிக்க மறுப்பதால் ஒப்பந்தம் இழுபறியாகி வருகிறது.

அடுத்தது என்ன?

மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், லோக்சபாவில் நேற்று கூறியதாவது: பலவீனமான பொருளாதாரம் என்பதில் இருந்து மீண்டு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார பலம் மிக்க நாடாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள விவகாரத்தில், இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே இதுவரை நான்கு சுற்று பேச்சு நடந்து முடிந்துள்ளன. தற்போது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்துள்ளதால், இதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எதுவாக இருந்தாலும் நாட்டின் நலனை பாதுகாக்கும் வகையில், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு திறம்பட மேற்கொள்ளும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

sivakumar Thappali Krishnamoorthy
ஆக 08, 2025 11:16

பிரிக்ஸ் கரண்சி வெளியிடும் நேரம் வந்தாச்சி என்று நினைக்கணும். அமெரிக்கா நிச்சயமா மிகவும் வருந்தும் நிலைமை மோடிஜி ஏற்படுத்துவார்


Thangavel
ஆக 21, 2025 13:57

நம்பறீங்க மோடி ஜி யா


MP.K
ஆக 02, 2025 16:27

கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவில் நம் நாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதை குறைக்கலாம்


Sri
ஆக 01, 2025 21:25

Theyre feeding snake pak also. Why relationship with our enemy


sankaranarayanan
ஆக 01, 2025 18:58

இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டதாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஒரு பொய் கூறியுள்ளார் தன்னிடம் கலம்........ ....இருக்கும்போதே அதை சுத்தப்படுத்தாமல் அடுத்தவனுக்கு ஆலோசனை எதற்கு டிரம்புக்கு இந்தியா எப்போதுமே அடிபணியாது அவர் சொல்வதை கேட்க வேண்டுமாம். நாம் நோபல் பரிசுக்கு மோடி அவர் பெயரை அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் இந்தியாவுடன் நட்பை கெடுத்துக்கொண்ட முதல் அமெரிக்க ஜானதிபதி இவர்தான். பாகிஸ்தானின் ராணுவ அதிகாரியை ஒரு பெரிய நாட்டின் ஜனாதிபதி சந்தித்தார் இதிலிருந்தே தெரிகிறது அவருடை மட்டமான அரசியல் நமக்கு மறைமுகமாகவே வேலை செய்து பாகிஸ்தானின் எண்ணையை இந்தியா வாங்க வேண்டுமாம் என்ன நோக்கம் இந்த அற்பனுக்கு பாகிஸ்தான் அரசில் முதல்வர் பிரசிடெண்டு இவர்கள் இருக்கும்போது அவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ராணுவ தளபதியுடன் ரகசியமாக சந்தித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற கெட்ட பெயர் வாங்கிவிட்டார் டிராம்பே ராணுவ தளபதியாக ஆகிவிட்டார் அப்படி என்ன இந்தியா இவருக்கு தீங்கு செய்துவிட்டது. டிரம்பின் அரசியல் தவறான செயல்களுக்கு விரைவிலேயே ஆண்டவன் தகுந்த சன்மானம் கொடுப்பார் அடக்கி வைப்பார் +


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 01, 2025 20:41

அந்த நாட்டு ஆண்டவனா, இல்லை இந்த நாட்டு ஆயிரக்கணக்கான சாமிகளா?


vivek
ஆக 01, 2025 17:39

இன்னைக்கு பேமென்ட் லேட் ஆயிடுச்சி.....அதனால மாதேஷ் லேட்டா கருத்து போட்டார்....யாரும் தப்பா நினைக்காதீங்க


Karthik Madeshwaran
ஆக 01, 2025 17:59

விவேக் ப்ரோ, ஜேம்ஸ் பாண்ட் ஆக மாறிய தருணம்.


vivek
ஆக 02, 2025 00:03

எவளோ கழுவி உத்தினாலும் தொடைச்சிட்டு போகும் மாதேஷ்


peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 01, 2025 16:59

யார் இருக்கா சசிதரூர்


Karthik Madeshwaran
ஆக 01, 2025 16:46

சசிதரூரை காங்கிரஸ் தலைமை மதிக்கவில்லை. ஒதுக்கி வைத்து விட்டது. மானமுள்ளவன் என்றால் தாமாக வந்து கட்சியை விட்டு வெளியேறிருப்பான். பதவி சுகத்துக்காக வெட்கமே இல்லாமல் திரிகிறார். காங்கிரசார், மற்ற எதிர்க்கட்சிகள் யாரும் அவரை மதிப்பதில்லை. மோடி, அவரை நன்றாக அரசியல் லாபத்துக்கும் தனது வாக்கு அரசியல் செய்யவும் பயன்படுத்தி கொள்கிறார். அதாவது எதிர்க்கட்சியான காங்கிரசை சேர்ந்த சசிதரூர் மோடியை பாராட்டி வருகிறார் என்று மக்களிடம் விளம்பரப்படுத்தி அரசியல் லாபம் பெற பயன்படுத்தி கொள்கிறார்கள். அவரது எதிர்காலம் கேரளாவில் முடிந்து விட்டது.


Saai Sundharamurthy AVK
ஆக 01, 2025 16:42

அமெரிக்க மக்கள் தான் கடுமையாக பாதிக்கப் படுவார்கள். இந்திய நிறுவனங்களுக்கு வேறு உலக நாடுகளின் சந்தை கிடைத்து விடும். மோடியின் பல நாடு விஜயம் கை மேல் பலன் கொடுக்கிறது. இந்திய மதிப்பில் சொல்வதானால் .. 2021 கோடி செலவு, வரவு ரூ9,51,469 லட்சம் கோடி .... அமெ‌ரி‌க்க டாலர் மதிப்பில் சொல்வதானால் ...... 28 கோடி டாலர் செலவு, வரவு 13,000 கோடி டாலர் வரவு. ட்ரம்ப் கைவெச்சா இந்தியா காலியாகும்னு நினைத்தவர்களுக்கு ஆச்சர்யம்! ட்ரம்ப் வரி போட்டால் இந்தியா காலின்னு காத்திருந்த கும்பலுக்கு, ஒரே ஷாக்....என்னடா ஸ்டாக் மார்க்கெட் கண்டுக்கவே இல்லைன்னு அதிர்ச்சி.. வெளிநாட்டு முதலீடுகள் எல்லாம் வெளியே போன பின்னாலும் இந்திய பங்குசந்தை எப்படி நிற்கிறது ???? இது ராகுல்காந்தி போன்ற வாடகை இந்தியனா வாழ்கிற வர்களுக்கு ஏமாற்றம்! அய்யோ மக்களின் மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் நாசமா போச்சுன்னு சில கதறலும், மோடிக்கு தில்லு இருந்தா, "ட்ரம்பை ஃப்ராடுன்னு" சொல்லச்சொல்லு பார்க்கலாம் என்று நமுத்து போன எதிர்பார்ப்பு! டிரம்ப் அவருடைய நாட்டுக்கு நல்லது என்று நம்புவதை செய்கிறார். அதுபோலவே நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்பதால் நாம் ஏற்கவில்லை. அதற்காக ட்ரம்புடன் நாம் எதற்காக சண்டை போடவேண்டும்? பல நேரங்களில் நமது எதிரி நாடுகள் நமக்கு போட்டியை ஏற்படுத்தி, ஈகோவை தூண்டி, நம்மை கடினமாக உழைக்க வைத்து, நமது உயர்வுக்கு காரணமாகி விடுகிறார்கள். உண்மையில் ட்ரம்ப் செய்வது அப்படிப்பட்ட செயல்களே! அது இந்தியாவிற்கு நல்ல விஷயங்கள் அல்லவா? அப்படியிருக்க நம்மை பாதுகாத்துக் கொண்டாலே போதும். சரி, இந்த வரி விதிப்பு இந்தியாவிற்கு கண்டிப்பாக தாக்கம் இருக்கத் தான் செய்யும். குறிப்பாக திருப்பூர் போன்ற டெக்ஸ்டைல் துறைகளுக்கும், எலெக்ட்ரானிக் பொருட்கள், மருந்து பொருட்களுக்கும் கூடத் தான்! ஆனால் பெரிய நஷ்டம் யாருக்கு? அந்த பொருளின் விலை உயர்வு யாரைப் போய் பாதிக்கப் போகிறது? இந்த பொருட்களளை கன்ஷ்யூம் செய்யும் அமெரிக்கர்களுக்கு அல்லவா ???இந்தியா தில்லாக, நீ என்ன வேண்டுமானலும் செஞ்சுக்கோ...., இனி பேச்சு வார்த்தைக்கு எதுவும் இல்லை என்று இந்திய அமைச்சரவை குழு டெல்லி திரும்பியதும், அமெரிக்கா எதற்கு டெல்லிக்கு ஓடிவருகிறது ? பேசுவதற்குத் தானே ? அதுவும் ஆகஸ்டில் பேசி முடிவு செய்வோம் என்ற அறிவிப்பு எதனால்? மீசையில் மண் ஒட்டவில்லை தானே ! ட்ரம்பருக்கு இது பெரிய இமேஜ் இழப்பு. அதை சமாளிக்க வரி போட்டாக வேண்டிய கட்டாயம். நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே போட்டிருக்கார். சரி! இப்போ என்ன ! ரஷ்யாவுடன் உறவு வைத்திருப்பதற்காக மேலும் ஒரு பெனால்டி என்கிறார்! சரி, போட்டுக்க...? நான் ரஷ்யாவிடம் வாங்கிறத வாங்கத் தான் போறேன் என்று இந்தியா சொல்லிவிட்டது....? இது தான் சமயம் என்று இப்போது இந்தியா இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கப் போகிறது. அது மட்டுமல்ல முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாஃப்தா என்ற பொருளை வாங்குகிறது. சீனா டகால்டி காட்டியதால் இப்போது ரஷ்யாவிடமிருந்து உரத்தை வேறு வாங்குகிறது. இந்தியா பயந்துவிட்டது என்று ஆடுவார்கள். ஆனாலும் இந்தியாவில் இப்போது இன்னும் கூடுதலாக ஐந்தாம் தலைமுறை விமானத்தையும், S-500 இந்தியாவில் உற்பத்தியையும் தாராளமாக தொடங்குவார் மோடி. புடினுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அட ! நாம கூட இந்த விளையாட்டை விளையாடலை யேப்பா !!! மோடி இப்படி கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகிறாரே என்று! அதனால் விலாடிவாஸ்டாக் வழியாக கச்சா ஏற்றுமதியையும், அங்கே ஒரு தொழில் நகரத்தை அமைக்கவும், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, நண்பேண்டா நான் என்று வேலை வாய்ப்பை வழங்கவும் ரஷ்யா முன்வருகிறது. ட்ரம்புக்கு நல்லா எரியட்டும்னு இந்தியாவோடு, சீனா கூட, உறவு பாரட்டும் வகையில் அமைந்து விட்டது டிரம்பின் இந்த வரி விதிப்பு. ஏற்கனவே இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை பாராட்டும் நாடுகளும், அமெரிக்க ஐரோப்பிய பொருளாதார வல்லுனர்களும், மறுபக்கம் ட்ரம்பை கலாய்க்கிறார்கள்! இந்த நிலையில் ரஷ்யாவின் "நாயரா" ( NAYARA )இன்னும் 70,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்விப்ட் மீது அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில், அடுத்தடுத்தடுத்து அமெரிக்கா செய்யும் தவறுகளால் அதன் எதிர்காலம் கேள்விக் குறியாகலாம். இந்தியா மீது விதித்த வரியால் உடனே பாதிக்கப்படும் பெரிய நிறுவனம் ஆப்பிள். ஆனால் ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தியாகும் செல் ஃபோன்களை, ஐரோப்பா போல் வேறு நாடுகளிலும், இந்திய தேவைகளுக்கும் அதை பயன்படுத்தும். அமெரிக்க தேவைக்கு சீனாவில் உற்பத்தி செய்யக் கூடும். எனவே, ட்ரம்ப் நினைப்பது போல அமெரிக்காவில் உற்பத்தி செய்ய நினைத்தால் அதை செவ்வாய் கிரகத்தில்தான் விற்க வேண்டும்.. இந்தியா தனது உற்பத்தி பொருட்களுக்கு வேறு சந்தைகளை பார்க்கும். அது இங்கிலாந்து, ஐரோப்பா மட்டுமல்ல ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளாக இருக்கும்.. அதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய ஆசிய நாடுகள் என்று விரிவாகும்.. ஆனால், அமெரிக்கா இந்தியாவின் மருந்து, மென்பொருள் மட்டுமல்ல, அதன் விண்வெளி திட்டத்திற்கே இந்தியாவை நம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது விதிக்கப்பட்ட வரிகள் சுடும். இந்தியாவை அல்ல, அமெரிக்காவைத் தான்! எனவே ட்ரம்ப் செய்யும் எல்லா டகால்டி வேலைகளும் அவரை ஓரம் கட்டும் என்பதை விட வருங்காலத்தில் அமெரிக்காவிற்கு பெரிய சவாலாக மாறும் என்பதை ஓரளவு யூகிக்கலாம். ஆனால் அதற்காக ட்ரம்பை திட்டாதீர்கள், அவர் செய்யும் நிறைய தவறுகள், இந்தியாவிற்கு பெரிய சாதகத்தைத் தான் செய்கிறது. ஆனால் ட்ரம்ப் வரி விதித்த 24 மணி நேரத்திற்குள் இந்தியா ரஷ்யாவோடு என்ன செய்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்கிறார்! ரஷ்யாவுடன் உறவு வைத்திருப்பதாலும், பிரிக்ஸில் இருப்பதாலும் பெனால்டி போட்டால் அது சீனாவிற்கும் பொருந்துமல்லவா? ஏன் அதை விட்டு விட்டீர்கள் என்று கேட்பார்களே?! இரண்டு பேரையும் பகைத்துக் கொண்டு ரெஸ்ட் ரூம் போனால்/துடைக்க பேப்பர் கூட இருக்காதே !? அதுவும் பாகிஸ்தான், சீனா, துருக்கி போல வெத்து வேட்டுகளை எதிர்ப்பதை விட வல்லரசான அமெரிக்காவை எதிர்ப்பது தான் சரி.


N Sasikumar Yadhav
ஆக 01, 2025 15:28

பாரதநாட்டிற்கு எதிராக யாராவது பேசிவிட்டால் உடனடியாக காசாவை மறந்துவிடுகிறார்கள் மூர்க்க ரத்தவெRY பிடித்த காட்டேரிகள் பாவம் காசா மக்கள்


J. Vensuslaus
ஆக 01, 2025 14:55

அமெரிக்காவின் atrocity க்கு சசி தரூர் ஆப்படிக்கிறார் என்று தலைப்பு சொல்கிறது. சசி தரூர் அமெரிக்காவுக்கு சுண்டக்கா. இவன் அவனுக்கு ஆப்படிக்கும்முன் அவன் இவனுக்கு அடடித்துவிடுவான். எதோ ஒரு வகையில் தரூர் பிஜேபி கிடுக்குப்பிடியில் சிக்கியிருக்கிறான். அதனால்தான் கட்சிகடந்த, பிராந்தியம் மொழி கடந்த இந்த அந்யோனியம். மோடிக்கு துதி பாடுவதில் அவர் கட்சி அடிமைகளைவிட ஓங்கி, உயர்ந்து நிற்கிறான் தரூர். பிரதமரை புகழ்வதில் தவறில்லை. ஆனால் தரூரின் புகழ்ச்சியின் பின்னணியில் ஏதோ ஒன்றிருக்கிறது. அந்த புகழ்ச்சியின் பின் உண்மை இருக்கிறதா, தஞ்சம் இருக்கிறதா அல்லது வஞ்சம் இருக்கிறதா என்பது தெரியவேண்டும். மேலும், அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பால் எல்லா நாடுகளுக்கும் பாதிப்புதான். ஆனால் எல்லோருக்கும் பாதிப்பு என்பதால் தனியொரு நாட்டுக்கு பாதிப்பு இருக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை