உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛காந்தி திரைப்படம் எடுக்காவிட்டால் அவரை பற்றி யாருக்கும் தெரியாது : மோடி

‛‛காந்தி திரைப்படம் எடுக்காவிட்டால் அவரை பற்றி யாருக்கும் தெரியாது : மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛காந்தி ' என்ற திரைப்படம் வெளிவராவிட்டால் அவரை பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரதமர் மோடி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, மகாத்மா காந்தி பற்றி 'காந்தி' என்ற திரைப்படம் எடுக்காமல் இருந்திருந்தால் அவரை பற்றி உலகில் யாருக்குமே தெரிந்திருக்காது. 1982-ல் ரிச்சர்ட் அட்டன்பர்க் எடுத்த ‛‛காந்தி'' குறித்த திரைப்படம் வந்த பிறகுதான் அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் ஏற்பட்டது.இந்த 75 ஆண்டுகளில், உலகத்துக்கு மகாத்மா காந்தியை அறிமுகம் செய்வது நமது கடமையல்லவா? மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உலக தலைவர்களை விட காந்தி குறைந்தவர் அல்ல. இவ்வாறு மோடி கூறினார். காந்தி குறித்து மோடி அளித்துள்ள பேட்டிக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ஜெய்ராம் ரமேஷ்:

காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார். காந்தியின் தேசியத்தை புரிந்து கொள்ளாததுதான் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் அடையாளம். அவர்களின் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட நாதுராம் கோட்சே, காந்தியைக் கொல்ல வழிவகுத்தது.

செல்வப்பெருந்தகை:

காந்தியின் புகழை சீர்குலைக்க வேண்டுமென்று இப்படியொரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அவரின் வரலாற்றைப் பற்றி பிரதமர் மோடி சிறிதும் அறியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Manikandan Mayavan
ஜூன் 01, 2024 19:57

என்ன தவறாக சொல்லி விட்டார். ஏன் காங்கிரஸார், விசிகவினர்,கொதிக்கிறார்கள்.. சாதாரணமாக சொன்னதை இவ்வளவு கதைக்கின்றனர்


venugopal s
மே 30, 2024 12:12

இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் இவரை ஆளவிட்டால் ...


ஆரூர் ரங்
மே 30, 2024 11:58

தீவீரமான விடுதலைப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய மிதவாத காங்கிரசையும் காந்தியையும் வளர்ந்துவிட்டது பிரிட்டிஷ் ராஜதந்திரம். அதனால்தான் திலகர் வஉசி, சாவார்கர் போல சிறைக் கொடுமைகளை காந்திக்குக் கொடுக்கவில்லை.


ஆரூர் ரங்
மே 30, 2024 11:48

கோட்சஸேவின் இறுதி வாக்குமூலத்தை வெளியிட காங்கிரஸ் அரசு தடைவிதித்திருந்தது. இல்லாவிட்டால் காந்தியின் உண்மை முகம் அப்போதே வெளிப்படையாக தெரிந்திருக்கும். பாடநூல்களில் காந்தி, நேரு ,இந்திரா, ராஜிவ் பற்றி திணிக்கப்பட்ட பொய் பிம்பங்கள் இப்போது கலைகின்றன.


சிராஜ்
மே 30, 2024 07:53

நான் கடவுள்னு ஹிட்லர் சொல்லிக்கொண்டு திரிஞ்சார்.


Senthoora
மே 30, 2024 06:29

அரசியல் பின் புலம் தெரியவில்லை, காந்திஜி என்று ஆப்ரிக்க நாட்டில் வெள்ளியர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாரோ, அன்றே காந்தி யார் என்று ஒவொரு வெள்ளையர்கள் முதல் இந்தியர் வரை தெரிந்துவிட்டது.


D.Ambujavalli
மே 30, 2024 06:28

சுதந்திரத்துக்கு முன் பிறந்தவர்கள் இன்னும் சிலர் உயிரோடிருப்பார்கள் அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் இன்றும் குஜராத்வ/ டில்லி வரும் வெளிநாட்டவர் முதலில் காண விரும்புவது காநிதிஜியின் வீடு, சமாதி தான்


ஆரூர் ரங்
மே 30, 2024 11:54

ஜனநாயகம் புதைக்கப்பட்ட இடம் டெல்லி ராஜ்காட். முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நேதாஜி காங்கிரஸ் தலைவராக வரமுடியாமல் அடித்ததும், படேலுக்கு பதில் யாருடைய ஆதரவையும் பெறாத நேருவை பிரதமராக ஆக்கியதும் மோகன்தாஸ் கரம்சந்தின் பெரும் ஜனநாயக் கொலைகள்.


Kasimani Baskaran
மே 30, 2024 05:47

காந்தி என்ற பிம்பத்தை வெள்ளைக்காரர்கள் ஊதி ஊதி பெரிதாக்கினார்கள்.


Sathyanarayanan Sathyasekaren
மே 30, 2024 03:22

நமது நாடு மூன்றாக உடைய காரணமான, பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களின் படுகொலைக்கு காரணமான இவர் மஹாத்மா என்பது நேரு குடும்பத்தினரால் கட்டமைக்க பட்ட மிக பெரிய பொய்.


Dharmavaan
மே 30, 2024 02:31

குருடனுக்கு ஏதோ கிடைத்தது போல ரொம்பவும் துள்ளுகிறார்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை