உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுக்கு பதிலளிக்க எந்த விதிகளும் இல்லை: ஜெய்சங்கர்

பயங்கரவாதிகளுக்கு பதிலளிக்க எந்த விதிகளும் இல்லை: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: ‛‛ பயங்கரவாதிகள் எந்த விதிகளையும் கடைபிடிப்பதில்லை. எனவே அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் எந்த விதிகளும் இல்லை'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: 1947 ல் காஷ்மீருக்குள் அத்துமீறி பாகிஸ்தான் ஊடுருவியது. அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கை எடுக்க துவங்கிய போது, அதனை நிறுத்திவிட்டு நாம் ஐ.நா.,விற்கு சென்று, பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று சொல்லாமல், பழங்குடியினர் ஊடுருவியதாக முறையிட்டோம். ஆரம்பம் முதல், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது எனக் கூறியிருந்தால், இன்று நாம் வேறு மாதிரியான கொள்கையை கொண்டு இருப்போம். எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.வெளியுறவுக் கொள்கை 50 சதவீதம் மாறி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என அனைவரும் நினைத்தனர். ஆனால், அப்போது தாக்குதல் நடத்துவதற்கு அதிகம் செலவாகும் என நினைத்தனர். மும்பை தாக்குதல் போன்று இப்போது ஒன்று நடந்து, அதற்கு எதிர்வினையாற்றவில்லை என்றால், அடுத்த தாக்குதலை எப்படி தடுப்பது. எல்லைக்கு அப்பால் இருப்பதால் யாரும் தங்களைத் தொட முடியாது என பயங்கரவாதிகள் நினைக்கக்கூடாது. எந்த பயங்கரவாதியும் எந்த விதிகளையும் கடைபிடிப்பது இல்லை. எனவே, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் எந்த விதிகளும் இல்லை. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.Ramakrishnan
ஏப் 13, 2024 22:29

ஆமாம் இவங்க விதிகளை மீறவே மாட்டாங்க சுத்தமான அக் மார்க் நியாயவான்கள்


spr
ஏப் 13, 2024 18:32

"எந்த பயங்கரவாதியும் எந்த விதிகளையும் கடைபிடிப்பது இல்லை எனவே, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் எந்த விதிகளும் இல்லை" இதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் பன்னாட்டு அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக சதி செய்கின்ற நிலையில் இதைப் போல வாய்விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது பயங்கர வாதிகளுக்கு எதிரான செயல்களில் பொய்யும் சொல்லலாம் சில நேரங்களில் வீரத்தைவிட விவேகம் அவசியம் மோடி போல ஒரு மனிதர் இன்றிருக்கலாம் ஆனால் நாளை பிரதமராக வருபவர் மன்மோகன் சிங்கைப் போல இருந்தால் என்ன செய்ய


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஏப் 13, 2024 16:24

அட தேர்தல் வந்துவிட்டதல்லவா அதற்குத்தான் இந்த வேலை


DGk
ஏப் 13, 2024 13:46

வலிமையான பாரதத்தை உருவாக்கியதில் திரு ஜெய்சங்கர் அவர்களின் பங்கும் உண்டு இவர் நம் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து


RAJ
ஏப் 13, 2024 13:17

இந்தியாவின் மகுடம் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் இதுவரை இந்தியா கண்டிராத மாணிக்கம் இதற்காகவே பிஜேபி ஜெபிக்கவேண்டும்


J GOWTHAM
ஏப் 13, 2024 12:35

வாழ்க பாரதம்...! பாரத நாட்டின் வலிமையை உலகறிய செய்ய வேண்டும்...!


M Ramachandran
ஏப் 13, 2024 12:18

பயங்கரவாதிகளுக்கு தெரிந்த மொழியில் பேசினால் தான் புரியும்


Raghuraman Kumaraswami
ஏப் 13, 2024 12:15

What a candid ரெஸ்பான்ஸ் by ஸ்ரீ Jayashankar and an appropriate caption by you for that


M Ramachandran
ஏப் 13, 2024 12:00

ஐயா ஸ்டாலின் முதல்வரான நீஙகள் இப்போ எவ்வளவு ரீல் சுத்தினாலும் பயனில்லை மக்கள் நம்பும் எல்லையய் தாண்டி விட்டீர்கள் கடைய்யசி நேரத்திலாவது பொய் வாய் பேசாமல் உண்மையாகா அரசு பணத்தை மக்களுக்கா நலனுக்கு திட்டத்தில் செலவு செய்ய கவனம் செலுத்துங்ள்


Varadarajan Nagarajan
ஏப் 13, 2024 11:47

இதுபோன்ற துணிச்சலான வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமரை நாம் பெற்றிருப்பதற்கு ஒவொரு இந்தியனும் பெருமையடையவேண்டும் போர் சூழலில் வெளிநாடுகளிலிருந்து நம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் அவர்களை கேட்டால் நமது பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் அருமை தெரியும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ