உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு

பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:''பாதுகாப்பு துறை அமைச்சரை பேச அனுமதிக்கிறார்கள். பார்லிமென்டில் பேச என்னை அனுமதிக்கவில்லை'' என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, முதல் நாளிலே லோக்சபாவை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.இது குறித்து, பார்லி., வளாகத்தில் நிருபர்களுக்கு ராகுல் அளித்த பேட்டி: பாதுகாப்பு துறை அமைச்சரை பேச அனுமதிக்கிறார்கள். பார்லிமென்டில் பேச என்னை அனுமதிக்க வில்லை. எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு பார்லி.,யில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. பா.ஜ., கூட்டணி கட்சி எம்.பி.களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவராக என்னை பேச அனுமதி அளிக்க வேண்டும். இது ஒரு புதிய அணுகுமுறை. அரசு தரப்பில் உள்ளவர்கள் பேச முடிந்தால், எங்களுக்கும் பேச இடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கூறியதாவது: ஆளுங்கட்சியினர் விவாதத்திற்குத் தயாராக இருந்தால், எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிக்க வேண்டும். அவர் பேச எழுந்து நின்றார். ஆனால் அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ramani
ஜூலை 22, 2025 06:43

பயித்தியத்தை யாரும் பேச அழைக்கமாட்டார்கள். அரைகிழ வயது வந்தாலும் அறிவு முதிர்ச்சி இல்லை மால் போய்விட்டதே இத்தாலி காரனுக்கு


vbs manian
ஜூலை 21, 2025 19:22

சப்பாணி பிள்ளை போல் எதற்கெடுத்தாலும் அழுகை குமுறல் கூப்பாடு. விவாதம் வரும் பொது மாயம்.


Bhakt
ஜூலை 21, 2025 19:17

பட்டாயா கிளம்பரத்துக்கு இது ஒரு சாக்கு.


தாமரை மலர்கிறது
ஜூலை 21, 2025 19:12

மிக சிறப்பாக செயல்படும் மத்திய அரசை சதா பொய் குற்றம்ச் சாட்டிக்கொண்டிருக்கும் ராகுலை பேச அனுமதிப்பது தான் தவறு.


Anand
ஜூலை 21, 2025 17:38

எதிர்க்கட்சியினர் தங்களோட தொகுதி பிரச்சனைகளை எடுத்துரைத்து மக்களுக்கு நல்லது செய்ய எத்தனிக்கவேண்டும், அதற்காகத்தான் தேர்ந்தெடுத்தது, பொறம்போக்குகள் போல ரகளை செய்து அற்ப சந்தோஷம் காண்பதற்காக அல்ல..


என்றும் இந்தியன்
ஜூலை 21, 2025 17:37

நீ பேசுவது பின்னாலிருந்து வரும் வாயு சத்தம் போலவே இருக்கின்றது என்று அனுமதிக்கவில்லை. என்ன பப்பு ராவுல் வின்சி தெரிஞ்சிச்சா


Rajan A
ஜூலை 21, 2025 16:52

பேசவில்லை என்று யாரும் அழவில்லை.


Sudha
ஜூலை 21, 2025 16:47

நீ தானே எதிர் கட்சிகள் தல, அமளி செய்யக்கூடாது ன்னு சொல்லிப்பார்த்தியா?


Kumar Kumzi
ஜூலை 21, 2025 16:27

நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு நாடுகடத்துவதே சிறந்தது


Madras Madra
ஜூலை 21, 2025 15:35

அப்படியே பேசிட்டாலும் .,.,.,