மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 16
புதுடில்லி:'லோக்பால் சட்டம் அவசியம் தான். ஆனால், அது ஒன்றால் மட்டுமே ஊழலை ஒழித்து விட முடியாது' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார்.டில்லியில், நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில், அவர் இதுகுறித்துப் பேசியதாவது:சுதந்திர இந்தியாவில், தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தான், ஊழலில் மூழ்கித் திளைக்கிறது. தினம் ஒரு ஊழல் தோண்டி எடுக்கப்படுகிறது. தவறான பொருளாதாரக் கொள்கைகளை அரசு பின்பற்றுகிறது. வலுவான லோக்பால் அமைப்பையே நாங்களும் விரும்புகிறோம். ஆனால், லோக்பால் அமைப்பு ஒன்று மட்டுமே, ஊழலுக்கு எதிரான போரில் நமக்குப் பெரும் வெற்றியைத் தந்து விடாது. ஊழலில் திளைக்கும் நிறுவனங்கள் மற்றும் அதிகார வர்க்கத்தை, லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதற்கான வழிகள் அரசின் லோக்பால் மசோதாவில் இல்லை.ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படுகின்றன. ஆனால், நிலம் கையகப்படுத்தலில் உள்ள பிரச்னைகளை எதிர்கொள்ள, லோக்பால் மட்டுமே போதாது.எம்.பி., எம்.எல்.ஏ.,க்களைத் திரும்பப் பெறும் உரிமை என்பதை விட, தேர்தல்களில் பணப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்பதுதான் முக்கியமானது.இவ்வாறு கராத் தெரிவித்தார்.
3 hour(s) ago | 3
4 hour(s) ago | 16