உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு என்பது பித்தலாட்டம்: பஞ்சாப் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்!

என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு என்பது பித்தலாட்டம்: பஞ்சாப் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்!

புதுடில்லி: மருத்துவக் கல்லுாரிகளில் என்.ஆர்.ஐ.,களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பஞ்சாப் அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.பஞ்சாப் மாநில மருத்துவக்கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில், என்.ஆர்,ஐ.,க்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக இந்த கோரிக்கையை மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்தது.கோரிக்கை மனுவில், 'என்.ஆர்.ஐ.,க்களின் துாரத்து உறவினர்களுக்கு, மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீதம் ஓதுக்கீடு வேண்டும்' என குறிப்பிட்டிருந்தது.சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பரி்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்தது.அப்போது நீதிபதிகள், 'என்.ஆர்.ஐ.,களுக்கு இட ஒதுக்கீடு செய்வதை உடனே நிறுத்த வேண்டும். இது சுத்தமான பித்தலாட்டம். நமது கல்வித்துறை அமைப்பிற்கு இந்த ஒதுக்கீடு என்ன செய்யப்போகிறது? இந்த பித்தலாட்டத்தை உடனடியாக நிறுத்தி முடிவு கட்ட வேண்டும் என்று கூறி மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
செப் 25, 2024 02:41

காலாகலமாக வெளிநாட்டு மாணவர்கள் வந்து அதிகமா ஃபீஸ் கட்டி ஐ.ஐ.டி, என்.ஐ.டி, மருத்துவக் கல்லூரிகளில் படிக்கிறார்களே. அதுபோல் பஞ்சாபிகளும் வந்து படிக்கட்டுமே. எதுக்கு கோட்டா?


Barakat Ali
செப் 24, 2024 20:21

பொதுவாக இட ஒதுக்கீட்டின் பலன் தேவைப்படுபவர்களுக்கு போய்ச்சேரவில்லை.


GMM
செப் 24, 2024 20:02

தேசிய இட ஒதுக்கீடு சட்டம் எதிராக மாநில நிர்வாகம் எடுக்கும் எந்த கொள்கை முடிவும் செல்லாது. சாதி இட ஒதுக்கீடு இன்னும் சரியாக அமுல்படுத்த வில்லை. இதில் மத, என் .ஆர் . ஐ . இட ஒதுக்கீடு. நிராகரிப்பு மிகவும் சரியே. கோட்டா டாக்டர் கட்டாயம் இந்தியாவில் பணி . அரசியல், வெளி நாடு என்றால் பணம் திருப்ப வசூல் சட்டம்.


Oru Indiyan
செப் 24, 2024 19:44

எல்லா ஒதுக்கீடுமே பித்தலாட்டம் தான். திறமைக்கு மட்டுமே வாய்ப்பு என்ற கொள்கை தான் நிரந்தரம். வேறு எந்த நாட்டில் ஒதுக்கீடு இருக்கிறது?


குரு, நெல்லை
செப் 24, 2024 19:29

இங்கே தமிழ்நாட்டில் என் ஆர் ஐ கோட்டாவில் முதலில் அட்மிஷன் நடைபெற்ற பின்னர் மாணவர்கள் விலகிக் கொள்கின்றனர் . அந்த கோட்டாவில் அந்த இட ஒதுக்கீட்டில் சாதாரண பணம் படைத்த வசதி உள்ள மாணவர்கள் சேர்கின்றனர் இந்த ஊழலானது அனைத்து மருத்துவ கல்லூரி கல்லூரிகளிலும் நடக்கிறது இதற்கு இந்த சீட்டுக்கு இத்தனை லட்சம் என வருடத்திற்கு வசூலிக்கப்படுகிறது கூடுதல் கட்டணமாக பல லட்சங்கள் தனியாக செலுத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை