உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்., மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.87 லட்சம் கோடி: தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?

அக்., மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.87 லட்சம் கோடி: தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அக்., மாதம் ஜி.எஸ்.டி., வருமானம் 9 சதவீதம் அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. ஜி.எஸ்.டி., மூலம் கிடைத்த ரூ.1.87 லட்சம் கோடியில் https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xn3mtesj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சி.ஜி.எஸ்.டி., ரூ.33,821 கோடிஎஸ்.ஜி.எஸ்.டி.,- ரூ.41,864 கோடிஐ.ஜி.எஸ்.டி.,- ரூ. 99,111 கோடிசெஸ் - ரூ.12,550 கோடி அடங்கும்.2022 அக்., மாதம் ரூ.1.72 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த அக்., மாதம் உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் ஜி.எஸ்.டி., 10.6 சதவீதம் அதிகரித்து ரூ.1.42 லட்சம் கோடியும் இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் 4 சதவீதம் அதிகரித்து ரூ.45,096 கோடியும் வசூல் ஆகி உள்ளது.2024ம் ஆண்டு ஜன., முதல் அக்., வரை 12.74 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூல் ஆகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.11.64 லட்சம் கோடி மட்டுமே வசூல் ஆகி இருந்தது.கடந்த ஏப்., மாதம் புதிய சாதனையாக ஜி.எஸ்.டி., மூலம் ரூ.2.10 லட்சம் கோடி வசூலாகி இருந்தது.

தமிழகத்தில்

தமிழகத்தில் இருந்து கடந்த மாதம் ரூ.11,188 கோடி ஜி.எஸ்.டி., வசூல் ஆகி உள்ளது. இது 4 சதவீதம் அதிகம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

GMM
நவ 02, 2024 08:18

ஜி.எஸ்.டி என்பது வரி கிடையாது. நுகர்வு, சேவை கட்டணம். வீட்டில் தயாரிக்கும் டீ க்கு கட்டணமில்லை. கடையில் பிறர் உழைப்பை படுத்தும் போது கட்டணம். மாநில நிர்வாகம் பத்திர பதிவு, டாஸ்மாக், பெட்ரோல் வரி... போன்றவற்றில் நிதி கொள்கை முடிவு செய்து ஏராளம் வருவாய் ஈட்டும். ஜி. எஸ். டி. வசூல் நிதி, பாதுகாப்பு சேவை செய்யும் மத்திய அரசு மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் தான் பெற வேண்டும். மொழி வாரி மாநிலம் தவறு. இந்தியாவை தற்போது நான்கு மாகாணங்கள் ஆக்க வேண்டும்.


panneer selvam
நவ 02, 2024 00:19

It is regret still people could not understand and read the figures of GST in economic point of view. In Oct 24, Tamilnadu GST collection is just 4% of national GST collection . It indicates Tamilnadu is trialing the consumption of goods GST is collected at point of sale comparing other smaller states like Karnataka , Gujarat even though population wise Tamilnadu is far head of these states . So Tamilnadu people are poor and do not have purchase capacity comparing these small states like Karnataka and Gujarat


Dhurvesh
நவ 01, 2024 23:49

GST வரி என்பது வருமானத்தின் மீதான வரி இல்லை ...நுகர்வோர் மீதான வரி .. ஏழைகள் நடுதரமக்கள் மீதான வரி , ஆகவே GST உயர்ந்தால் பெருமை இல்லை ..... மக்களின் பாக்கெட்டில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் பிடுங்கப்படுகிறது


Constitutional Goons
நவ 01, 2024 22:00

அந்நிய முறையிலான கார்போரேட்டு கொள்ளைகள் தமிழகத்தில் பெருமளவு ஒடுக்கப்பட்டுள்ளது


ஆரூர் ரங்
நவ 01, 2024 22:00

நாட்டின் மக்கள் தொகையில் தமிழகம் ஆறு சதவீதம். ஜிஎஸ்டி வசூலிலும் அதே சுமார் ஆறு சதவீதம் மட்டுமே தமிழகத்தின் பங்கு. ஆக நாம் ஒன்றும் அதிக சதவீத வரி செலுத்துவதில்லை. நமது ஜிஎஸ்டி வசூல் வட மாநிலங்களுக்கு போகிறது என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்கா?


Subramanian Marappan
நவ 01, 2024 21:25

திமுக அரசு ஜிஎஸ்டி வருவாயை மத்திய அரசு சரியாக வழங்கவில்லை என்று உருட்டுவார்கள். இவர்களுக்கு பெட்ரோல் டீசல் வாட் பெரிய தொகை கிடைக்கிறது. மேலும் வாகன வரி பத்திர பதிவு கனிம வளம் சொத்து வரி டாஸ்மாக் உண்மையான வருவாய் லஞ்சம் ஊழல் வருமானம் எவ்வளவு வருகிறது என்று சொல்ல சொல்லமாட்டார்கள். கடன் அதிகமாவது பற்றி பேசுவார்கள்.அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரும் சொத்து எத்தனை மடங்கு உயர்ந்தது என்று சொல்ல மறந்து விடுவார்கள்.


Ramamoorthy raju
நவ 01, 2024 21:16

என்ன என்ன பொருள் விலை நார்மலை விட அதிகமாகி உள்ளது என சொல்ல முடியுமா???


Subramanian Marappan
நவ 01, 2024 21:10

திமுக அரசு ஜி


yuva Kanish
நவ 01, 2024 20:06

மக்களின் ரத்தம்! அட்டைப்பூச்சியாய் உறிஞ்சுகின்றனர்.


krishnan
நவ 01, 2024 21:35

பெட்ரோல் டீசல் liqur தவிர சாதாரண மக்கள் பெரிசாக பாதிக்க படுவதில்லை. 40 லட்சம் வரை கிஸ்தி தேவை இல்லை. பெட்ரோல் டைசல் வரி GST உல் வர மத்திய அரசு தயார் .. மணிலா அரசுகள் தயாரில்லை .


A P
நவ 01, 2024 20:05

இந்த G S T வருமானத்தை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும் கட்சியானது , மத்திய அரசுக்குச் செலுத்தியது போல , சில திருடர்களும் அவர்களின் உ பி களும், உருட்டுவார்கள். இது பூராவும் மக்கள் வாங்குகிற பொருட்களுக்கும் இதர சேவைகளுக்கும் செலுத்திய வரி என்பது எல்லோரும் ஞாபகம் வைத்துக் கொள்ளணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை