உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ பெண் ஊழியருக்கு அதிகாரி பாலியல் தொல்லை

மெட்ரோ பெண் ஊழியருக்கு அதிகாரி பாலியல் தொல்லை

ராஜாஜிநகர்: ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலைய பெண் ஊழியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, அதிகாரி மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.பெங்களூரு ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், ஊழியராக வேலை செய்பவர் ஹேமலதா.இவர் சுப்பிரமணிநகர் போலீசில் அளித்த புகார்:ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், உதவி அதிகாரியாக வேலை செய்யும் கஜேந்திரா, 45, என்பவர், பெண் ஊழியர்களை ஆபாசமாக திட்டுகிறார். தனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். பெண் ஊழியர்களை ஆபாசமாக தொட்டு, பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதற்கு ஒத்துழைக்காவிட்டால், வேலையில் இருந்து நீக்குவதாக மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.இதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கஜேந்திரா மீது மெட்ரோ ரயில், உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்