உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகள் வாட்ஸாப் குழு கேரள அரசு விசாரணை

அதிகாரிகள் வாட்ஸாப் குழு கேரள அரசு விசாரணை

திருவனந்தபுரம், கேரளாவில், ஹிந்து மதத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை ஒன்றிணைத்து துவங்கப்பட்ட, 'வாட்ஸாப்' குழு விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.கோபாலகிருஷ்ணன், திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார்.அதில், வாட்ஸாப் செயலி பயன்பாட்டுக்கான தன், 'மொபைல் போன்' எண்ணை யாரோ 'ஹேக்' செய்துவிட்டதாகவும், அந்த எண்ணில் இருந்து பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சேர்த்து, 'ஹிந்து கம்யூனிட்டி குரூப்' என்ற பெயரில் வாட்ஸாப் குழு துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த விபரம் தெரியவந்ததும், அந்த குழுவை உடனடியாக கலைத்துவிட்டதாகவும் தெரிவித்துஉள்ளார். மேலும், அந்த எண்ணில் இருந்து மல்லு ஹிந்து ஆபீசர்ஸ், 'மல்லு முஸ்லிம் ஆபீசர்ஸ்' என்ற பெயரிலும் குழுக்கள் துவங்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவி கூறியதாவது:இது மிகவும் தீவிரமான பிரச்னை. அதிகாரிகள் மத்தியில் மத ரீதியிலான பிரிவினைகள் ஏற்படுவது ஆபத்தானது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
நவ 05, 2024 03:31

அந்த எண்ணில் இருந்து மல்லு ஹிந்து ஆபீசர்ஸ், மல்லு முஸ்லிம் ஆபீசர்ஸ் என்ற பெயரிலும் குழுக்கள் துவங்கப் பட்டுள்ளன. திசை திருப்பும் வேலையை டீம்காவால மட்டும்தான் செய்ய முடியுமா ????


Barakat Ali
நவ 05, 2024 03:29

வாட்ஸ் ஆப் official அல்ல ... out of office, ஒரு வாட்ஸ் ஆப் குழு வைத்திருப்பதில் தவறில்லையே ???? அதே கேரளாவில் ஒரு பொதுத்துறை வங்கியின் ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியுள்ளனர் .... அந்த விவகாரம் இன்னும் சீரியஸானது .... ஆனால் அது சர்ச்சை ஆகவில்லை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை