உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கொல்கட்டாவில் பழைய பஸ்களுக்கு அனுமதி

 கொல்கட்டாவில் பழைய பஸ்களுக்கு அனுமதி

கொல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் பழைய தனியார் பஸ்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள், தடையை விலக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் நகருக்குள் இயங்குவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து, மேற்குவங்க அரசு வரைவு அறிக்கை தயாரித்து, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதை ஏற்று, உரிய உத்தரவுகளை வெளியிட மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ