உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா சபாநாயகராக 2வது முறையாக ஓம் பிர்லா தேர்வு

லோக்சபா சபாநாயகராக 2வது முறையாக ஓம் பிர்லா தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா சபாநாயகராக குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். 2வது முறையாக சபாநாயகரான ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்தனர்.சபாநாயகரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க பா.ஜ., எடுத்த முயற்சி பலன் அளிக்காததால், லோக்சபாவில் இன்று(ஜூன் 26) சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. தே.ஜ., கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, 'இண்டியா' கூட்டணி சார்பில் கே.சுரேஷ் போட்டியிட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a14pvv9i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் குரல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் அதிகப்படியான எம்.பிக்கள் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 2வது முறையாக ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவரை சபாநாயகர் இருக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் பிரதமர் மோடி அழைத்து வந்தனர். அவருக்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மகிழ்ச்சி

பின்னர் பிரதமர் மோடி லோக்சபாவில் பேசுகையில், சபாநாயகர் பதவி கடினமானது என்றாலும், ஓம் பிர்லா மீண்டும் தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி. சபாநாயகராக மீண்டும் தேர்வாகி உள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துக்கள்'' எனக் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vathsan
ஜூன் 26, 2024 15:50

ரப்பர் ஸ்டாம்ப் இவர். நியாயம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது.


தத்வமசி
ஜூன் 26, 2024 15:34

சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சபாநாயகர் தேர்தல். இண்டி கூட்டணிக்கு ஆறுதல் தோல்வி. காரணம் அந்த இணக்கத்தை உடைத்தாயிற்று. அடுத்து துணை சபாநாயகர் தேர்வு. சாதாரணமாக இந்த பதவி எதிர்கட்சிக்கு வழங்கப்படும். கடந்த பத்து வருடங்களாக எதிர்க்கட்சி என்பது இல்லாததால் காங்கிரஸ் பதட்டத்தில் நமக்கு வர வேண்டிய பதவி வருமா ? வராதா ? என்பது தெரியாமல் விழி பிதுங்கி சபாநாயகர் தேர்தலில் சச்சரவு செய்தது. இப்போது இந்த துணை சபாநாயகர் பதவியை பிஜேபி கட்டாயம் எதிர் கட்சிக்கு விட்டுத் தர வாய்ப்பில்லை. ஆப்பு புடுங்கிய குரங்காகிப் போனது காங்கிரசும் இண்டி கூட்டணியும்.


ram
ஜூன் 26, 2024 15:28

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் படு தோல்வி


Narayanan
ஜூன் 26, 2024 13:36

சபாநாயகர் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்று அறிந்தும் தான் எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிட்டோம் என்ற மமதையில் பாவம் ரமேஷை பலிகடா ஆக்கிவிட்டார் ராகுல்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 26, 2024 13:12

நெல்லிக்காய் மூட்டை இந்தியா கூட்டணி ஹாஹாஹா


A1Suresh
ஜூன் 26, 2024 12:19

மாண்புமிகு சபாநாயகருக்கு வாழ்த்துக்கள். மோடிஜி மிக அழகாக கூட்டணி கட்சிகளை கட்டுக்கள் வைத்திருக்கிறார்


Mettai* Tamil
ஜூன் 26, 2024 12:14

வாழ்த்துக்கள்


Mettai* Tamil
ஜூன் 26, 2024 12:11

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...


Ranganathan PS
ஜூன் 26, 2024 12:02

இந்தி கூட்டணி ஆரம்பமே தோல்வி . 303 மெம்பெர் இருப்பதால் நிச்சயம் கடைசி வரை சென்று மூக்கு உடைக்கப்படும்


K.SANTHANAM
ஜூன் 26, 2024 11:57

பாராளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. தேசிய ஜனநாயக முன்னணியின் முதல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை