உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்.16-ல் காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு

அக்.16-ல் காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு

ஸ்ரீநகர்:: காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா வரும் 16-ம் தேதி பதவியேற்க உள்ளார்.90 இடங்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், உமர் அப்துல்லா, எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.கடந்த 11-ம்தேதி துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த உமர் அப்துல்லா. அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமைகோரினார். ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து வரும் புதன் கிழமை (அக்.16ம் தேதி) முதல்வராக உமர் அப்துல்லா காலை 11:30 மணியளவில் பதவியேற்கிறார். அவருக்கு துணை நிலைகவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
அக் 15, 2024 06:00

ஊழல் செய்து அதில் நோபல் பரிசும் வாங்கிய நிபுணர். ஆகவே மத்திய அரசு விசாரணை அமைப்புக்களை காஷ்மீருக்கு அனுப்பி வைப்பது இந்தியாவுக்கு நல்லது.


Kasimani Baskaran
அக் 15, 2024 06:00

ஊழல் செய்து அதில் நோபல் பரிசும் வாங்கிய நிபுணர். ஆகவே மத்திய அரசு விசாரணை அமைப்புக்களை காஷ்மீருக்கு அனுப்பி வைப்பது இந்தியாவுக்கு நல்லது.


கிஜன்
அக் 14, 2024 21:28

இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ....விழா மிக பிரமாண்டமாக நடைபெற வேண்டும் .... ஆட்சி அமைப்பவர்கள் ..இந்தியா தம் தாய்நாடு என்ற உணர்வோடு இறையாண்மையை காக்கும்வகையில் மத்திய அரசுடன் இணைந்து நல்லாட்சி தருக ...


vadivelu
அக் 14, 2024 20:14

காங்கிரசுக்கு சபா நாயகர் பதவி கூட கிடையாதா. மந்திரி பதவிதான் இல்லையே.


சமீபத்திய செய்தி