உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓம்பிர்லா எதிர்ப்பு

ஓம்பிர்லா எதிர்ப்பு

ராகுல் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென ஒரு புகைப்படத்தை கையில் எடுத்தார். அதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு ராகுல், “நான் என்ன புகைப்படம் காட்டப்போகிறேன் என்பதற்கு முன்பாகவே, அது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக 'டிவி' ஆப் செய்கிறீர்கள்,” என்றார். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.பின்னர் ராகுல் பேசுகையில், “இது பட்ஜெட் தயாரிப்புக்காக அல்வா கிண்டியபோது எடுத்த புகைப்படம். அதில், உள்ளவர்களில் ஒருவர்கூட பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களோ, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களோ இல்லை. நாட்டிற்காக அல்வா கிண்டி தயாரிக்கப்படுகிறது. 75 சதவீதம் பேர் ஏழைகள். ''அவர்களுக்கு அல்வா இல்லையா. இந்த நாட்டிற்கான அல்வாவை, வெறும் 20 சதவீதம் பேர் பகிர்ந்து கொண்டால் எப்படி சரி,” என்றார். இதைக் கேட்டதும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தலையில் கை வைத்தபடி முகத்தை மூடிக் கொண்டு சிரித்ததை பார்க்க முடிந்தது.

புகைப்படத்தால் சலசலப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூலை 30, 2024 07:06

இந்துக்கள் என்று சொல்பவர்கள் பட்டியல் இனத்தவரை மனிதர்களாக மதிக்காமல் விலங்குகளை விட கேவலமாக நடத்துகின்றனர். இது அரசின் அங்கங்களிலும் பிரதிபலிக்கிறது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி