உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிண்டன்பர்க் அவங்க ஆளுங்க; காங்கிரஸ் மேல் பழியை போடுகிறது பா.ஜ.,

ஹிண்டன்பர்க் அவங்க ஆளுங்க; காங்கிரஸ் மேல் பழியை போடுகிறது பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும், காங்கிரசிற்கும் தொடர்பு உள்ளது' என பா.ஜ., எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டிள்ளார்.அதானி நிறுவனம் குறித்து, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ரவிசங்கர் பிரசாத் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பங்கு சந்தையை சீர் குலைக்க சதி நடக்கிறது. பங்குசந்தை சரிவடைந்தால் சிறு முதலீட்டாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி செய்கின்றனர். ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரசிற்கும் தொடர்பு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=90eq9ctk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மோடி வெறுப்பு

செபி தலைவர் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிகள் நடக்கின்றன. காங்கிரசின் மோடி வெறுப்பு தற்போது இந்தியா வெறுப்பாக மாறியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக சதி நடைபெறுகிறது. பெகாசஸ் ஊழல் வழக்கின் போது உச்சநீதிமன்றம் ராகுலின் போனை கேட்டது; அவர் தரவில்லை. அந்த போனில் என்ன இருந்தது, எதை மறைக்கப் பார்த்தார் ராகுல்?

பொருளாதாரம்

மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததை காங்கிரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்த போதும் இது போன்ற அறிக்கைகள் வெளியாகாதது ஏன்? செபி அனுப்பிய நோட்டீஸ் குறித்து, இதுவரை ஹிண்டன்பர்க் பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்க ஏன் மறுக்கிறது என்பது குறித்து தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Indian
ஆக 13, 2024 16:19

நேரு வோட தாத்தா மேல பழியை போட்டாலும் போடுவாங்க கில்லாடிகள்


AMLA ASOKAN
ஆக 12, 2024 21:30

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒலிம்பிக் வீரர் போல் அதி வேகமாக இந்தியாவின் முதல் பணக்காரராக வெற்றி பெற்ற அதானி கடைசியில் பல லட்சம் கோடி கொண்ட SEBI அமைப்பையும் தட்டிச்சென்று விட்டார் . இன்னும் ஒன்று தான் பாக்கி உள்ளது - பிரதமர் பதவி . ரேஷன் அரிசி கோதுமை சாப்பிட்டு வாழும் 80 கோடி ஏழை மக்கள் அதானிக்கு வாக்களித்து இந்தியாவை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் .


தாமரை மலர்கிறது
ஆக 12, 2024 20:17

அதானி சிறந்த தேசப்பற்றாளர். எலிகுட்டியாக இருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை டைனோசராக மாற்றியவர் அதானி. வெளிநாட்டு சதிகாரர்கள் ராகுலை தூண்டிவிட்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அதானி மீது பழிபோடுகிறார்கள். ஆனால் இந்தியா இதை வேடிக்கை பார்க்காது. அடானியை சீண்டினால், புலியாக சிலிர்த்தெழுந்து, ராகுல் ஜெயிலுக்குள் போவார். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்க யார் முயன்றாலும், தாங்கமுடியாத வலியை உணரநேரிடும்.


venugopal s
ஆக 12, 2024 17:00

அப்போது அதானி உங்கள் ஆள் என்று ஒத்துக் கொள்கிறீர்கள், அப்படித்தானே?


Anand
ஆக 12, 2024 18:44

அதாவது, ஹிண்டன்பர்க் இந்திய வளர்ச்சியை தடுக்க இத்தாலிய மாபியாக்களால் ஏவப்பட்ட கைக்கூலி என கூறுகிறீர்கள்.....


Suppan
ஆக 12, 2024 16:35

அதானி பங்குகள் இன்று 1-3% கீழிறங்கின. ஆனால் நிப்டி 20 புள்ளிகள்தான் இறங்கியது. ஷார்ட்செல்லிங் செய்தவர்கள் முழிக்கிறார்கள் . இன்று சந்தை அதலபாதாளத்தில் இறங்கும் என்று நினைத்தவர்கள் தலையில் கைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


Srinivasan k
ஆக 12, 2024 20:35

please check Adani stocks recovered sun tv lost 10%, Adani stocks on the range 3-5% like others higher loss by percentage was seen for sun tv due to weak results


Siva Subramaniam
ஆக 12, 2024 16:33

பல ஊழல்களில் இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதற்கிடையில் மேலும் பல ஊழல்கள் நடந்தவண்ணம் உள்ளன.


அசோகன்
ஆக 12, 2024 16:30

இதே எலன் மாஸ்க் னு சொல்லுங்க இந்த அடிமை கூட்டம் காலில் விழுந்து வணங்கும்....... இப்பதான் சபரீசன் பல கோடிகளுக்கு அச்சாரம் அதானியோடு போட்டார்.... அதை பத்தி பேசமாட்டானுங்க இந்த உபி...... ஒரே ஒரு குடும்பம் மொத்த தமிழ் நாட்டையும் வளைத்து போட்டுள்ளதை பேசுங்கடா


kulandai kannan
ஆக 12, 2024 16:10

வெள்ளைத் தோலுக்கு அடிமைகள் இந்திய மீடியா வும், எதிர் கட்சிகளும்.


Sivakumar
ஆக 12, 2024 17:54

வர்ணாஸ்ரமத்தை ரொம்ப கரெக்டா follow பன்றாங்க போல


ஆரூர் ரங்
ஆக 12, 2024 15:15

மாதவி புச் குடும்பத்தினர் அவர் SEBI யில் சேருவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அடானி சம்பந்தப்பட்ட பங்குகள் முழுவதையும் விற்று விட்டனர். SEBIபணியில் சேரும் நேரத்தில் அவருடைய அனைத்து முதலீட்டு விவரங்களையும் SEBI யிடம் தெரிவி்ததுவிட்டனர். இப்போது இருவருக்கும் தொடர்பு எனக் கூறுவது காங் தூண்டுதலின் பேரில்தானே?. காங்கிரசை மக்களும் நம்பவில்லை. முதலீட்டாளர்களும் மதிக்காததால் இன்று பங்குச் சந்தை குறியீட்டெண் ஏறியுள்ளது.


S R George Fernandaz
ஆக 12, 2024 14:15

ஹி ஹி ஹி ஹி .....சொல்லு சொல்லு. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ... ஹி ஹி ஹி


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி