உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குருவாயூர் கோவில் யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் துவக்கம்

குருவாயூர் கோவில் யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் துவக்கம்

பாலக்காடு; கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின், 36 யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தில் உள்ள, குருவாயூர் கிருஷ்ணர் கோவில் சார்பில், 36 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை மாதம் 'ஜீவதானம்' எனும் பெயரில், புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8k2ns3n3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0யானைகளின் சுகாதாரப் பாதுகாப்புக்காக, கடந்த, 35 ஆண்டுகளாக தேவஸ்தானம் சார்பில், இந்த முகாம் நடத்தப்படுகிறது.புன்னத்தூர் கோட்டை பகவதி கோவில் வளாகத்தில், நடப்பாண்டுக்கான புத்துணர்வு முகாமை, வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் நேற்று துவக்கி வைத்தார். 'விநாயகன்' என்ற யானைக்கு, அமைச்சர் மூலிகை உணவு வழங்கினார்.'ஜீவதானம்' சிறப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் தேவஸ்தான கால்நடை அதிகாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து, ஒரு மாதம் நடக்கும் முகாமில், அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், மஞ்சள், உப்பு மற்றும் நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் யானைகளுக்கு வழங்கப்படும். இதற்காக, குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தேவஸ்தானம், 12.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி