உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சம வாய்ப்பு வழங்க தேர்தல் நடத்தை விதிமுறைகள் அவசியம்: அடித்து சொல்கிறது தேர்தல் கமிஷன்!

சம வாய்ப்பு வழங்க தேர்தல் நடத்தை விதிமுறைகள் அவசியம்: அடித்து சொல்கிறது தேர்தல் கமிஷன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க தேர்தல் நடத்தை விதிமுறைகள் அவசியம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதால், வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அவசியம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. மேலும் மத்திய அரசு கூறியதாவது: தேர்தல்களை நடத்துவதில் அதிக செலவு மற்றும் நேரம் வீணாகி வருகிறது. இது மட்டுமின்றி தேர்தல்களின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அமல்படுத்துகிறது. விதிமுறைகளை அமல்படுத்துவதால், அரசின் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றைத் தடுக்கும் நோக்கில், ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது அவசியமாகிறது. இவ்வாறு மத்திய அரசு கூறியிருந்தது. இது தொடர்பாக சட்ட ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் கமிஷன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது அவசியம். தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும். நம்பகமான முடிவுகளை பெறுவதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

SP
ஜன 13, 2025 17:38

பணம் கொடுப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் எந்த தேர்தலும் நேர்மையாக நடக்காது தேர்தல் நேரத்தில் வாகன சோதனைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பு அரசியல்வாதிகள் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பணபட்டுவாடாவை யார் யாரிடம் கொடுக்க வேண்டுமோ கொடுத்து விடுவார்கள்.


KRISHNAN R
ஜன 13, 2025 12:18

எல்லாம் இருக்கு.... ஆனா சனநயகமா பணனாயகமா?


GoK
ஜன 13, 2025 11:14

கருங்காலிகளை அவங்க நடத்துற கட்சிகளை மொதல்ல தட பண்ணுங்க மொதல்ல குடும்ப அரசியல ஒழியுங்க அப்பா மொதல் மந்திரி புள்ள உதவி துணை முதல்வன் அத்தை, மச்சான் MP ...அங்கே என்னடான்னா கொள்ளு பாட்டன், பாட்டி, அப்பா இவிங்க பிரதம மந்திரியாய் இருந்ததாலே நானும் பிரதமர் அப்படின்னுட்டு ஒத்தர் ...மக்களாட்சியா மன்னராட்சியா? அத மொதல்ல ஒழிங்க


GMM
ஜன 13, 2025 11:13

தேர்தலுக்கு 3 மாதம் முன் அதிகாரம் துஸ்பிரயோகம் தவிர்க்க, பின் 3 மாதம் பிரதிநிதிகள் பயிற்சிக்கு ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தி, தேர்தல் நடத்தை விதிகளை நீக்க முடியாதா? 3 மாதத்தில் மட்டும் தான், வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் எந்த விதியையும் அமுல்படுத்த முடிவது இல்லை. சம வாய்ப்பு என்றால், அனைத்து கட்சிகளும் கட்டாயம் போட்டியிட வேண்டும். வாக்களிக்காத, நோட்டோ வாக்கை பகிர்ந்து வேட்பாளர் அனைவருக்கும் சேர்க்க வேண்டும். 50 சதவீதம் வாக்கு மேல் பெற்றால் தான் புதிய மசோதாவை ஆதரிப்பது செல்லும்.


Ramalingam Shanmugam
ஜன 13, 2025 10:46

erode formula வை தடுக்க முடியல உங்களால் சாத்தான் வேதம் ஓதுகிறது


N.Purushothaman
ஜன 13, 2025 10:24

அரசியல் என்பது சேவை என்கிற நிலை மாறி அது "தொழிலாகி" இப்போது அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் மாடலை தான் தற்போதைய தேர்தல் முறையும் ஜனநாயகமும் உருவாக்கி உள்ளது... காலத்திற்க்கேற்ப அதை மாற்றி எளிமையான அரசியல் உன்னதமான சேவை என்கிற நிலையை உருவாக்க சீர்த்திருத்தங்கள் மிக மிக அவசியம் ...அந்த இலக்கை எட்ட ஏதாவது செய்யுங்கள் ..


ديفيد رافائيل
ஜன 13, 2025 10:12

ஒரே நாடு ஒரே தேர்தலில் லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலையும் சேர்ந்து நடத்தலாம்.


M Ramachandran
ஜன 13, 2025 10:12

அது இருக்கட்டும் முதலில் தேச விரோத செயலில் ஈடு படும் பப்பு என்கின்ற ராவுளை அடக்க முடியாம பாருங்கள்


ஆரூர் ரங்
ஜன 13, 2025 09:17

பட்டியில் வாக்காளர்களை அடைப்பது செம வாய்ப்பு?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 12:48

கூவத்தூர் ரிசார்ட்டில் போல அடைத்தால் தான் சரி.


Priyan Vadanad
ஜன 13, 2025 09:04

யாரை, எந்த சித்தாந்தத்தை, எந்த நோக்கத்துடன், யாருடைய ஆதாயத்துக்காக, எந்த கட்சியின் ஆதாயத்துக்காக, தேர்தல் கமிஷன் அடித்து சொல்கிறது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை