உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுரையில் நள்ளிரவில் ஒருவர் வெட்டிக்கொலை; 2 தனிப்படைகள் அமைப்பு

மதுரையில் நள்ளிரவில் ஒருவர் வெட்டிக்கொலை; 2 தனிப்படைகள் அமைப்பு

மதுரை: மதுரை மாநகராட்சி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரன் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7xg302fj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை தனக்கன்குளம் பகுதியில், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜபாண்டிக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது.இரு தரப்பினருக்கு இடையே மோதல் காரணமாக 15க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பழிக்கு பழியாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் ராஜபாண்டியின் உறவினரான பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் பங்கு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் வி.கே.குருசாமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ganesh
மார் 23, 2025 19:00

இப்பொழுது தான் ஆட்டை கடித்து மாட்டுக்கு வந்து இருக்கிறார்கள். சாதாரண பொது மக்களிடம் இருந்து முன்னாள் திமுக ஆட்களிடம்தமிழ்நாட்டு ரௌடிகள்.... எப்பொழுது மனுஷனை கடிக்கிறார்களோ,அப்பொழுது தான் இந்த அரசு முழிக்கும் என்று நினைக்கிறேன்....அதுவரைக்கும் நன்றாக தூங்கட்டும் உளவுத்துறையுடன் சேர்ந்து.....


என்றும் இந்தியன்
மார் 23, 2025 18:36

திமுக என்றால் பொதுவாக அதன் செயல் பாடு இப்படி உள்ளது தி -தினம்தினம் மு- முன்னோடி கொலை கொள்ளை ஊழல் கற்பழிப்பு மாநிலம் க- கண்ட கண்ட இடங்களில்


Mani . V
மார் 23, 2025 15:31

போகிற போக்கைப் பார்த்தால் கருணாநாடு என்று மாற்றாமல் கொலைநாடு என்று மாற்ற வேண்டி வந்து விடும் போல் இருக்கிறது. குடும்பம் மொத்தமும் பதவியில் உட்கார்ந்து கொண்டு கும்மி அடித்துக் கொண்டு இருக்கிறது.


Ramesh Sargam
மார் 23, 2025 10:56

மீண்டும் புரளி என்று சொல்வார் முதல்வர். தவறுகளை திருத்தவே மாட்டார்.


M Ramachandran
மார் 23, 2025 10:36

விடியல் ஆட்சியில் தினம் இது சாதாரண நிகழ்வு.


vijai hindu
மார் 23, 2025 10:30

இந்த இரண்டு ரவுடிகளும் 15க்கு மேற்பட்டவர்கள் கொலை நடந்துள்ளது இவர்கள் இரண்டு பேரையும் எப்பயுமே என்கவுண்டர் பண்ணி தள்ளி இருக்கணும் உறவினர் ரவுடியை சேர்த்து என்கவுண்டர் பண்ணி இருக்கணும்


अप्पावी
மார் 23, 2025 08:58

எதுக்கு விசாரணை? பட்டப் பகலிலேயே வெட்டிக் கொன்னுட்டு தாராளமா நடமாடலாமே. எதுக்கு ராத்திரி தூக்கத்த கெடுத்துக்கிட்டுன்னு விசாரிப்பாங்களோ?