உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

திருமலை : ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து 'திருமலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும்,'' என, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு கடந்தாண்டு நவம்பரில் அறிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vl3lnou1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் தனது பேரனின் பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் திருமலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாவது: நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமிக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்துழைப்பு கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன்.இக்கோயிலில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஹிந்துக்கள் அல்லாத பிற மதத்தவர்கள் பணியாற்றி வந்தால் அவர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள். ஏழுமலையான் வெங்கடேஸ்வர சுவாமியும் அதன் புனிதத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். கோவிலில் புனிதமற்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களின் தலையாய கடமை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

aaruthirumalai
மார் 21, 2025 21:39

சரி


ராஜி
மார் 21, 2025 21:09

மாற்று மத வழிபாட்டுதலங்களில் இந்துக்களாக இருக்கின்றனர் ?


Perumal Pillai
மார் 21, 2025 21:06

ஐயனே நீ வாழ்க உன் குலம் வாழ்க உன் கொற்றம் வாழ்க


MARUTHU PANDIAR
மார் 21, 2025 21:04

எந்த நிலத்தில் சர்ச் மற்றும் மசூதி அமைப்புகளின் பணியில் அரசு ஊதியம் பெரும் இந்துக்கள் உள்ளனரா என்பதை அறிந்தவர்கள் கூறலாம் .2 நாயுடு காருவுக்கு நாத்திகம் பேசி பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்ல 3 முதுகெலும்புள்ள முதல்வர் 4நாஸ்திகமும் துவேஷமும் மட்டுமே த்ராவிடாஸ் பார்ட்டியின் அஸ்திவாரம் .


Easwar Kamal
மார் 21, 2025 21:04

எதுக்கு ஹிந்து மட்டும் தெலுங்கனுங்க மட்டும்தான் பணி அமர்துவோம்னு சொல்லலாமே ? மொத்தமா திருப்பதி வருகின்ற செல்வதை அவனுங்களுக்குளே பிரிச்சிக்கலாமே. முதலில் இந்த திருப்பதி கோவில் அரசியல்வாதிகள் கையில் செல்லாமல் தனியாக இயங்க வேண்டும். இந்த கோவிலுக்கு வருகின்ற பணம் 60% தெலுங்கனுங்க கொடுக்கலாம் மீதி 40% மற்ற மாநிலத்தவர்கள் கொடுகின்றனர்.


தமிழ்வேள்
மார் 21, 2025 20:05

ஹிந்து கோவில்களில் பொய் சான்று அளித்து வேலை பெற்று ஏமாற்றிய குற்றத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.....இதுங்களுக்கு இத்தனை நாள் சம்பளம் கொடுத்ததை திருப்பி வாங்க முடிந்தால் நல்லது.. பெருமாள் இட்ட பிச்சையில் சோறு தின்றவர்களுக்கு அவர்கள் மதம் தரும் தண்டனையை ஆந்திரப் பிரதேச அரசே தரவேண்டும்...


Amar Akbar Antony
மார் 21, 2025 20:00

வரவேற்கப்படவேண்டிய முடிவு. வாழ்க வளமுடன் நாயுடுகாரு


V Venkatachalam
மார் 21, 2025 19:59

சுடாலினுக்கு மண்டையில் அடி குடுத்துட்டாரு.. சேகர் பாபு பாவம் ஏற்கனவே கல்யாண் பவன் குடுத்த அடியில் முழி பிதுங்கி போயிருக்காரு..


Ramesh Sargam
மார் 21, 2025 19:27

ஹிந்துக்கள் மட்டுமே இந்தியாவில் வாழவேண்டும். மற்றவர்கள் பொத்திக்கொண்டு அமைதியாக வாழவேண்டும். இல்லையா, இந்தியாவை விட்டு ஓடிப்போயிடவேண்டும்.


பெரிய ராசு
மார் 21, 2025 20:29

அருமை ..ஓடிவிடுங்கள் ...இல்லேயேல் அமைதியாக இருக்கவும் ...


ManiK
மார் 21, 2025 19:27

இப்படி தெளிவாக பேசும் ஒரு முதலமைச்சர் நம்ம தமிழகத்துக்கு கிடைக்க மாட்டாரா?!! தமிழக மக்கள் தற்போது இருக்கும் அவலத்தை உணர்ந்து கொண்டால் நிச்சயமாக நடக்கும்.