உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் மோடி

கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.புதுடில்லி விஞ்ஞான் பவனில், பாலியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான திறவுகோல் இரக்கமும் நல்லெண்ணமும் தான். கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும். பாலி மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது. இது புத்தரின் மரபுக்கு கிடைத்த கவுரவம்.புத்தபெருமானை பின்பற்றும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று புனிதமான நாள். பாலி மொழியை வாழ வைப்பதும், புத்தபெருமானின் வார்த்தைகளை உயிர்ப்பிப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும். இந்த பொறுப்பை எங்கள் அரசாங்கம் மிகவும் பணிவுடன் நிறைவேற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புத்தரின் போதனைகள் மனித குலத்தின் நலனுக்கான அசைக்க முடியாத உறுதியாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
அக் 17, 2024 21:48

தம்மிடம் இல்லாததை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை!


சாண்டில்யன்
அக் 17, 2024 20:05

நேற்று அர்பன் நக்ஸல்கள் என்றார் இன்றோ நல்லெண்ணம் என்கிறார் என்னாச்சு அவருக்கு.இந்துத்துவாவை விட்டு சமணத்துக்கு மதமாற்றமோ? எப்படியோ இலங்கைக்காரனை காக்கா பிடிச்சார்னா ஒரு வேளை தமிழக மீனவர்களுக்கு விமோச்சனம் கிடைக்கலாம்


கணேஷ்பட்
அக் 17, 2024 16:42

கருணையா பேசி தளவாடமும் விற்க முடியும். ரஃபேல், ஏவுகணை, அப்பாச்சி, ட்ரோன் எல்லாம் வாங்க முடியும். ஐ.நா வுல ஓட்டளிக்காம ஒதுங்கிக்க முடியும்.


சாண்டில்யன்
அக் 17, 2024 20:01

ஒரு டிரோன் ஆயிரம் கோடிக்குமேல் விலை என காண்க


Ms Mahadevan Mahadevan
அக் 17, 2024 13:44

பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது


Sundar R
அக் 17, 2024 12:37

புத்தமதம் என்பது மதமா? அல்லது தத்துவமா? காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, சமண காஞ்சி, ஜைன காஞ்சி & புத்த காஞ்சி என்று ஐந்து வகையான தத்துவங்களைக் கடைபிடித்து ஹிந்துக்கள் ஒன்றாகத் தானே இருந்தார்கள். மன்மோகன்சிங் ஆட்சி முடியும் முன்பு ஜைனத்தை ஹிந்து மதத்திலிருந்து பிரித்து ஜைன மதத்தைப் பிரித்து அதற்கு மைனாரிட்டி அங்கீகாரமும் கொடுத்தார். ஹிந்துக்கள் யாருமே ஒன்றும் சொல்லவில்லை. ஆட்சியாளர்கள் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள்? இவையெல்லாம் மக்கள் கவனிக்கத்தக்க விஷயமில்லையா?


தஞ்சை மன்னர்
அக் 17, 2024 12:36

அதை தன் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ள வேடிக்கை பார்த்தவர் சொல்லக்கூடாது


hari
அக் 17, 2024 16:43

தஞ்சை மன்னா இங்கேயும் அப்படித்தான் 200 ரூபாய் கொதடிமயே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை