உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக குழந்தைகள் பெறுவோருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரணும்: சந்திரபாபு நாயுடு யோசனை

அதிக குழந்தைகள் பெறுவோருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரணும்: சந்திரபாபு நாயுடு யோசனை

அமராவதி: அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வோருக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஒரு காலத்தில், பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிக குழந்தைகள் வைத்திருப்போர் போட்டியிட முடியாது. இப்போது நிலைமை மாறிவிட்டது. கொள்கையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=02hcuz3d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான் சொல்வது என்னவென்றால், குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளை கொண்ட நபர்கள் போட்டியிட முடியாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஒரு நபர் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்று சட்டத்தை மாற்றினால் மக்கள் தொகை குறைவதைக் கட்டுப்படுத்த முடியும்.அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வோருக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளேன். உங்கள் பெற்றோர்கள் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். அதை நீங்கள் ஒரு குழந்தையாகக் குறைத்துவிட்டீர்கள். இதேபோல் உங்களது பெற்றோர்கள் நினைத்து இருந்தால் இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்க முடியாது.எல்லா நாடுகளும் இந்தத் தவறைச் செய்தன. சரியான நேரத்தில் நாம் முடிவெடுக்க வேண்டும். தற்போது, நிலைமை கையை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மக்கள் தொகை வீழ்ச்சியின் ஆபத்தை உணரவில்லை. வருமானத்தை அதிகரிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தி இப்போது சிக்கலில் உள்ளனர். தற்போது நமது மாநிலத்தில் 2047ம் ஆண்டுக்குப் பிறகு, அதிக வயதானவர்கள் இருப்பார்கள். ஒரு பெண் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை குறையும். நீங்கள் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை அதிகரிக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

MARUTHU PANDIAR
ஜன 17, 2025 17:45

ம் .....இவரது ஆலோசனையை பின் பற்றினால் இவரது கட்சி உறுப்பினர்கள் சட்ட மன்றம் முழுவதும் யாராக இருப்பாங்க சொல்லுங்க ...அது ஒரு மர்மம் ஆக இருக்குமோ ?


முருகன்
ஜன 17, 2025 06:15

நன்றாக இருந்த இவர் இந்த முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடப்பது முறனாக உள்ளது


Ramesh Sargam
ஜன 16, 2025 20:19

குழந்தைகள் வளர்ப்பு, படிப்பு செலவு, மருத்துவ செலவு நாயுடு தருவாரா...?


தாமரை மலர்கிறது
ஜன 16, 2025 20:08

இஸ்லாமிய ஓட்டுக்களை குறிவைத்து நாயுடு திராவிட நரிபோன்று பேசியுள்ளார். இன்னும் இருபத்தாண்டில், நூற்றி அறுபது கோடி மக்கள் இந்த நாட்டில் வாழ்வார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நிற்பதற்கு கூட இடமின்றி போய்விடும் நிலை உள்ளது.


Mediagoons
ஜன 16, 2025 20:01

அப்படியிருந்திருந்தால் பதவிக்கு வந்திருக்க முடியாது.


Ganesh
ஜன 16, 2025 19:47

இவர்கள் எல்லாரும் ஆந்திரா வை பார்த்து திட்டுகிறார்கள்... இரண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து இருபது வருடங்களாக டாஸ்மாக் மூலமாக இளைஞர்களின் ஈரலை கொன்று விட்டார்கள்.... நம் தமிழ்நாடு தான் மக்கள் தொகை குறைவால் மிகவும் பாதிக்கபட போவது... இளைஞர்கள் குறைவால் நம்மால் உற்பத்தி திறன் கண்டிப்பாக பாதிக்கும்.... அரசு துறை இப்போதாவது முழித்து கொள்ளுமா?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 16, 2025 19:14

ஏற்கனவே இந்தியாவின் மக்கள் தொகை விண்ணை முட்டுகிறது. இன்னும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா?? இருக்கிறவர்களுக்கே பள்ளி, கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை என்று எங்கேயும் இடம் இல்லை. ஒவ்வொரு கம்பெனி யும் 1000 பேர், 2000 பேர் என்று வேலையிலிருந்து நீக்குகிறது. பஸ், ரயில், விமானம் எல்லாவற்றிலும் மக்கள் கூட்டம். இன்னும் இன்னும் பிள்ளைகள் பெற்றுக் கொண்டால்???? யோசிக்கவே மாட்டாங்க போல. இதை ஆதரித்து கருத்து போடுபவர்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன்


Ramalingam Shanmugam
ஜன 16, 2025 17:56

அக்கவுண்டில் இல்லாதவருக்கு சேர்த்து தானே


Ravi Chandran
ஜன 16, 2025 16:58

அப்பத்தானே அதிக ஊழல் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.


என்றும் இந்தியன்
ஜன 16, 2025 16:52

அதிக பிள்ளைகள் அதிக மனைவிகள் உள்ளோருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரணும் என்று கூட சொல்லலாம், ஏன்னா எல்லா அரசியல்வாதிகளும் அப்படித்தானிருக்கின்றார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை