உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரண்டு மாத நிதி மட்டுமே பாக்கி

இரண்டு மாத நிதி மட்டுமே பாக்கி

தொட்டபல்லாபூர்: ''அன்ன பாக்யா திட்ட நிதி, இரண்டு மாதங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இனி அந்தந்த மாத நிதி, பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்,'' என, உணவு பொது விநியோக துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.தொட்டபல்லாபூர் துபாகெரே கிராமத்தில் உள்ள பிரசன்ன லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகத்தில் உணவு பொது விநியோக துறை அமைச்சர் முனியப்பா பங்கேற்றார்.பின், அவர் அளித்த பேட்டி:நான்கைந்து மாதங்களாக அன்னபாக்யா பயனாளிகளுக்கு பணம் வரவில்லை என்பது பொய். இரண்டு மாதங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இத்தொகை விரைவில் செலுத்தப்படும். இனி ஒவ்வொரு மாதமும் பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தால், எங்கள் பணியை சரியாக செய்வோம்.இப்பகுதி கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம், பள்ளி வாகனம், விளையாட்டு மைதானம், கழிப்பறை உட்பட பல வசதிகளுடன் பள்ளி மேம்பாடு செய்யப்படும்.இன்போசிஸ் அறக்கட்டளை தலைமையில் மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. விரைவில் இப்பணி துவங்கும். இது குழந்தைகளின் உயர் கல்வியை தொடர உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், ஹூப்பள்ளியில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அளித்த பேட்டி:மத்திய அரசு, 34 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் அரிசியை, கர்நாடக அரசுக்கு 22.50 ரூபாய்க்கு அரிசி வழங்க தயாராக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 2,280 கோடி ரூபாய் மீதமாகும். ஆனால் மாநில அரசு, எங்களிடம் இருந்து அரிசி வாங்கவில்லை. முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, இந்த வாய்ப்பை வேண்டுமென்றே புறக்கணிக்கிறது. மாநில அரசு திவால் நிலையை எட்டி உள்ளது. கிரஹலட்சுமி, அன்ன பாக்யா திட்டத்துக்கு பணம் வழங்க அரசிடம் பணம் இல்லை.வீட்டுக்கு அரிசியும், பணமும் வரவில்லை. நாங்கள் தருகிறோம் என்றாலும், வாங்குவதில்லை. கடந்தாண்டு ஜூனில், எங்களிடம் அரிசி இருப்பதாக, அமைச்சர் முனியப்பாவிடம் கூறினேன். அவரும் வந்து பார்வையிட்டார். ஆனால் ஆர்டர் கொடுக்கவில்லை. அதை வாங்க, அவர்களிடம் பணமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை