உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள்: வாங்க மத்திய அரசு அனுமதி

ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள்: வாங்க மத்திய அரசு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து ஆயுதப்படையினருக்கு ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவசர கால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: அவசரகால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் பாதுகாப்பு படையினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் கீழ் கண்காணிப்பு ட்ரோன்கள், தற்கொலை ட்ரோன்கள், பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகள், ராக்கெட்கள், வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவை வாங்கப்பட உள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இவை வாங்கப்பட உள்ளன.கடந்த ஐந்தாண்டுகளில், ஐந்தாவது முறையாக அவசரகால கொள்முதல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளன.பாகிஸ்தானுக்கு எதிரான மோதலின் போது பிரமோஸ் உள்ளிட்ட ஏராளமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதனையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவை ஆயுதப்படைகளை செயல்படுத்த உள்ளன. அவர்களுக்கு பாதுகாப்புப்படை நிதி குழுவினர் அறிவுரை வழங்குவார்கள்.இது தொடர்பாக பொதுத்துறை மற்றும் தனியார் துறையினருடன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள இலக்குகளை தாக்க பயன்படுத்தப்பட்ட ரேம்பேஜ் ஏவுகணைகள் தற்போது வாங்கப்பட உள்ளன. முன்பு இந்த ஏவுகணைகளுக்காக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை நேரில் கண்காணித்த ஹெரோன் மார்க் 2 டுரோன்களும் வாங்கப்பட உள்ளன. டுரோன்களை கண்டுபிடிப்பதற்கான ரேடார்கள் தொடர்பான ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுவனமான பெல் -க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டில் டுரோன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஒப்பந்தங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
மே 18, 2025 08:10

சமூகவலைத்தளங்களில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை என்றாலும் நிஜவாழ்க்கையில் வாழ்நாளில் மறக்கமுடியாத அளவுக்கு பாக்கிகளுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்து விட்டார்கள். எந்த நாடும் இதுவரை எதிரி நாட்டின் அணுவாயுத கிட்டங்கிகளை குண்டு வைத்து தகர்த்தது இல்லை. இத்தனை பாதுகாப்புக்கும் மத்தியில் விமானதாங்கிக்கப்பல் கூட பயன்படுத்தாமல் இந்தியாவுக்குள்ளேயே இருந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் - அதுவும் பாகிஸ்தான் பல்லாயிரம் டிரோன்களை இந்தியாவை நோக்கி அனுப்பியபின்னர்.


A1Suresh
மே 18, 2025 04:15

ஆபரேஷன் சிந்தூரின் 3 நாள் தாக்குதலில் அணுகுண்டு வைத்த நிலவறைகள் இரண்டு மலைகளில் கிரானா குன்று மற்றும் சகாய் குன்று பகுதிகளில் நடந்தது. பாகிஸ்தான் சரணடைந்தது. மீண்டும் ஆபரேஷன் தொடர்ந்தால் நிபந்தனையற்ற சரண்டர் தான். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலூசிஸ்தான் என அனைத்தும் எடுத்துக்கொள்ள சொல்வர்.


துர்வேஷ் சகாதேவன்
மே 17, 2025 22:50

டெண்டர் யாருக்கு எலெக்டரால் BOND வாங்கியவுடன் தெரிய வரும்


மீனவ நண்பன்
மே 17, 2025 23:32

... மூலம் டெண்டர் கொடுத்தா இந்தமாதிரி கருத்து வராமல் இருக்கும்


சர்வேஷ் மகாதேவன்
மே 17, 2025 23:34

ஒரு அரசாங்கம் திறம்பட செயல்பட்டு பெயரெடுத்தால் எத்தனை பேருக்கு வயித்தெறிச்சல்? நடந்த சம்பவங்கள் என்ன? எப்படா கல்லெறியலாம் என்றே ஒரு கும்பல் காத்திருக்கறது.


N Sasikumar Yadhav
மே 18, 2025 00:40

ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கூட்டணியில்லை இது . இப்போது பாரதத்தில் ஆட்சி செய்வது தேசபக்தியுள்ள பாரதியஜனதா கட்சியின் ஆட்சி


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 18, 2025 07:20

ராணுவ தளவாட டெண்டர் ஜீ ஸ்குயர் நிறுவனத்திற்கு கொடுக்க பரிந்துரைக்கிறார்.....கேட்டுச்சா மத்திய அரசே....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை